சுவாச நோய்கள் – சுவாச பிரச்சனை தீர்வு

பொதுவாக சுவாசிப்பதிலும், மூச்சு விடுவதிலும் பலருக்கும் பல தொந்தரவுகள் ஏற்படும். அவற்றை வீட்டிலேயே எளிமையாக வீட்டு வைத்தியம் மூலம் போக்கும் சில வழிகள்.

இரைப்பு

10 கிராம் இஞ்சி, 3 வெள்ளெருக்கம் பூ, 6 மிளகு இவற்றை சிதைத்து அரை லிட்டர் நீரில் காய்ச்சி கால் லிட்டராக்கி காலை, மாலை கொடுக்க தீரும்.

இருமல்

இஞ்சிச்சாறு 30 மில்லி, மாதுளம் பழச் சாறு 30 மில்லி சேர்த்து அதனுடன் தேன் 15 மில்லி கலந்து மூன்று வேலை சாப்பிடத் தீரும்.

மார்பு சளி

தூதுவளை இலைச் சாற்றில் சம அளவு நெய் கலந்து பதமாக காய்ச்சி வடிகட்டிக் காலை, மாலை 5 மில்லி சாப்பிட தீரும்.

மூச்சுத்திணறல்

ஆவரையின் பஞ்சாங்கச் சூரணம் 10 கிராம் விடம் காலை, மதியம், மாலை வெந்நீருடன் கொள்ளத தீரும்.

மூக்கடைப்பு

1 துண்டு சுக்கைத் தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு பாதியாகக் காய்ச்சிப் பால், நாட்டு சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வரத் தீரும்.

கப இருமல்

20 கிராம் விராலி இலையை இடித்துக் கால் லிட்டர் நீரில் 1 நாள் ஊறவைத்து வடித்து 20 மில்லியைச் சிறிது பாலுடன் சாப்பிட்டு வர சளி இருமல் தீரும்.

நுரையீரல் புண்

ரோஜா இதழுடன் தேன் கலந்து ஊற வைத்து குல்கந்து தயாரித்து காலை, மாலை ஒரு ஸ்பூன் சாப்பிட நுரையீரல் புண் சரியாகும்.

https://www.youtube.com/watch?v=r9vXPIg2f5E&t=410s
(7 votes)