ஒன்பது நாள் விழாவான நவராத்திரி நாட்களில் நைவேத்தியமாகவும் பிரசாதமாகவும் இருக்கும் மற்றொரு சுண்டல் மொச்சை சுண்டல். உடலுக்கு நல்ல பலத்தையும், புரத சத்துக்கள் நிறைந்ததுமாக இருக்கும் தானியம் மொச்சை. இனி சுவையான மொச்சை சுண்டல் செய்முறையை பார்க்கலாம். மேலும் நவராத்திரியின் பிரசாதங்கள், பெருமை, சிறப்பு, கொண்டாடும் அவசியத்தையும் இந்த இணைப்பில் தெரிந்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
- 2 கப் மொச்சை
- சிறிது கறிவேப்பிலை
- சிறிது பெருங்காயம்
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1/2 ஸ்பூன் உளுந்து
- 2 வரமிளகாய்
- எண்ணெய்
- உப்பு
சுண்டல் பொடி
- 1 ஸ்பூன் கடலைப் பருப்பு
- 4 வர மிளகாய்
- 1 ஸ்பூன் தனியா
செய்முறை
- மொச்சையை காலையில் ஊறவைத்துக் கொள்ளவேண்டும். குறைந்தது 7 – 8 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
- பின் சிறிது கல் உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவேண்டும்.
- ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, தனியா, வரமிளகாயை வாசம் வரும் வரை வறுத்து ஆறியதும் மிக்ஸியில் பொடித்துக் கொள்ள வேண்டும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து தாளித்து, இரண்டு வரமிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பின் அதனில் வேகவைத்த மொச்சையையும் சேர்க்கவும்.
- தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்து அதனுடன் வறுத்து அரைத்த பொடியையும் சேர்த்து நன்கு கிளற சுவையான மொச்சை சுண்டல் தயார்.
மொச்சை சுண்டல்