சிறுதானிய வகைகள்

சத்து நிறைந்த புன்செய் தானியங்கள் ஆறு மாத குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை யாவரும் உண்ண உகந்த தானியங்கள். சத்துக்கள் அதிகம் கொண்ட தானியங்கள் நம் சிறுதானியங்கள். இத்தானியங்களில் இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் போன்ற தனிமங்கள் மிகுந்திருக்கின்றன.

இந்த சின்ன தானியங்களால் (சிறுதானியங்களால்) ஆன உணவு குளுகோஸை சிறிது, சிறிதாக நீண்ட நேரத்துக்கு வெளியிடுவதால் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. 

காலம் காலமாக நாம் தமிழகத்தில் பயன்பாட்டில் இருந்த தானியங்கள் இந்த சிறுதானியங்கள். இவற்றில் பல வகைகள் உள்ளது. அவற்றை தெரிந்து கொள்வோமா?

  • Finger Millet / Ragi – கேழ்வரகு
  • Pearl Millet / Bajra – கம்பு
  • Sorghum / Jowar – சோளம்
  • Kodo Millet – வரகு அரிசி
  • Little Millet – சாமை அரிசி
  • Barnyard Millet – குதிரைவாலி அரிசி
  • Foxtail Millet – தினை அரிசி
  • Proso Millet – பனிவரகு அரிசி

கேழ்வரகு / ராகி

காலத்தால் அழியாத தானியமாக இருக்கும் சிறுதானியம் கேழ்வரகு. நவீன உணவுகள், உலக உணவுகள், புதுப்புது உணவுகள் இருந்தாலும் என்றும் அழியாமல் நம் தமிழகத்திலும் இந்தியாவிலும் புழக்கத்தில் இருக்கும் குறுந்தானியம் கேழ்வரகு. மேலும் கேழ்வரகின் பயன்கள், நன்மைகளை தெரிந்து கொள்ள…

Kelvaragu, ragi, Finger Millet

கம்பு

கேழ்வரகைப் போல் தமிழகத்திலும் இந்தியாவில் என்றும் பிரபலமாக இருக்கும் சிறுதானியம் கம்பு. இதனை Bajra என்று இந்தியில் அழைப்பதால் பல மாநிலங்களில் bajra என்றே அழைக்கப்படுகிறது. உடலுக்கு நன்மை அளிக்கும் கம்பில் நாட்டுக்கம்பே சிறந்து விளங்குகிறது. மேலும் கம்பைப் பற்றி தெரிந்துக்கொள்ளவும், கம்பின் பயன்கள் நன்மைகளுக்கும்…

Bajra-Pearl-Millet-Nattu-Kambu

சிறுசோளம்

அரிசி, கோதுமையை விட பெரும்பாலான இந்திய மக்களுக்கு முதல் உணவாக இருக்கும் சிறுதானியம் சிறு சோளம் என்ற Jowar. சிறுசோளத்தில் பல வகைகள் உள்ளது. பொதுவாக வெள்ளை அல்லது சிவப்பு நிற சிறுசோளம் பிரபலமாக காணப்படும் ஒன்று.

Jowar-Sirucholam-Sorghum

வரகு

தமிழகத்தில் தெற்கு மாவட்டங்களில் என்றும் பிரபலமாக இருந்த மற்றொரு சிறுதானியம் வரகரிசி. பல சத்துக்களை கொண்ட தானியம் இது. மேலும் வரகு அரிசியைப் பற்றி தெரிந்து கொள்ள…

Kodo-Millet-Varagu-arisi

சாமை

மலை கிராமங்களில் பல வகை சாமை அரிசி என்றும் நடைமுறையில் புழக்கத்தில் இருக்கும் தானியம். சிறுதானிய வகையில் மிக சிறிய தானியங்களில் ஒன்றான சாமை பல சத்துக்கள் கொண்ட தானியம். மேலும்…

Little-Millet-Samai-Arisi

தினை

சங்க காலத்திலும், முருகக் கடவுளுக்கும் உகந்த தானியம் தினை. புறா, கிளி போன்ற பறவைகள் விரும்பி உண்ணும் தானியங்களில் தினையும் ஒன்று. மேலும் தினையின் நன்மைகள், பயன்களுக்கு…

Thinai-Arisi-Foxtail-Millet

குதிரைவாலி

சிறு தானியங்களில் மென்மையான தானியம் குதிரைவாலி அரிசி.தென் தமிழகத்தில் அதிகமாக பயிரிடப்படும் சிறுதானியம். மேலும் குதிரைவாலி அரிசியைப் பற்றி தெரிந்து கொள்ள…

Kuthiraivali-Barnyard-Millet

பனிவரகு

மலையில் பெரும்பாலும் பனியைக் கொண்டு விளையும் தானியம் பனிவரகு அரிசி. மேலும் பனிவரகு நன்மைகள், பயன்களுக்கு…

Proso-Millet-Panivaragu siruthaniyam
(26 votes)