சிறுதானியங்கள் என்றால் என்ன?
காலம் காலமாக குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த நமது முன்னோர்கள் உணவுக்காக பயன்படுத்திய தானியங்களே சிறுதானியங்கள். பொதுவாக வயலும் வயல் சார்ந்த இடங்களில் இருக்கும் மக்கள் நெல் அரிசியையும், புன்செய் (புஞ்சை நிலம்) மற்றும் மலையும் மலை சார்ந்த மக்கள் சிறுதானியங்களையுமே உணவு தானியங்களாக பல்லாயிரம் ஆண்டுகளாக உண்டு வாழ்ந்து வந்தனர்.
இவ்வளவு காலம் சிறுதானியங்கள் எங்கிருந்தது?
காலம் மாற மாற நவீன உலகத்தில் உணவு பயணப்பட தொடங்கியப்பின் பல வெளியூர், வெளிநாட்டு உணவுகள் வர நமது தானியங்கள் மெல்ல மறையத் தொடங்கியது. உதாரணத்திற்கு கடந்த ஐம்பது ஆண்டுகளில் சிறுதானியங்கள், நமது பாரம்பரிய நெல் அரிசிகள், நாட்டு பயிர்கள் மறைந்து கோதுமை, ஓட்ஸ் என நமது தமிழகத்திற்கு சொந்தமில்லாத தானியங்கள் உணவு பயன்பாட்டில் அதிக இடத்தை பிடித்துவிட்டது. இதனால் ஆரோக்கிய கேடு, உடல் உபாதை, நீரிழிவு, உடல் பருமன் என புதுப்புது வாழ்வியல் நோய்கள் படையெடுக்க தொடங்க மீண்டும் நமது பாரம்பரிய தானியங்களை நோக்கி பலர் திரும்பத் தொடங்கியுள்ளனர்.
சிறுதானிய வகைகள் யாவை?
நம் முன்னோர் காலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுதானியங்களில் இருந்துள்ளது. அவற்றில் சில மட்டுமே இன்றும் புழக்கத்தில் உள்ளது. அவை கேழ்வரகு, கம்பு, சிறு சோளம், வரகு, சாமை, தினை, பனிவரகு, குதிரைவாலி ஆகியவையாகும்.
சிறுதானியங்களை அனைவருமே எடுத்துக் கொள்ளலாமா?
பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் ஏற்ற தானியம் சிறுதானியம். நமது தமிழகத்தில் இன்றும் பிறந்த குழந்தையின் முதல் வெளி உணவாக சிறுதானிய வகையைச் சேர்ந்த கேழ்வரகே உள்ளது. கேழ்வரகு பாலையே குழந்தைகளுக்கு நமது முன்னோர்கள் அளித்தனர்.
சிறுதானியங்களின் பயன்கள் என்ன?
மழையை சார்ந்து பயிரிடப்படும் சிறுதானியங்களை பொதுவாக இரசாயனங்கள், பூச்சிகொல்லிகள் இன்றியே பயிர்செய்யப்படுகிறது. அதனால் இவை இயற்கையாக விளைந்தவை, உடலுக்கு தீங்கு விளைவிக்காதவை. உடலில் இருக்கும் நோய்கள், உபாதைகள், தொந்தரவுகளை போக்க அதிகம் பயன்படுகிறது.
சிறுதானியங்களை எவ்வாறு பயன்படுத்துவது?
நமது பெருந்தானியமான நெல் அரிசியில் செய்யக்கூடிய அனைத்து உணவுகளையும் சிறுதானியங்களில் செய்யலாம். சிறுதானிய சோறு, கூழ், இட்லி, தோசை, புட்டு, இடியாப்பம், பாயாசம் என அனைத்தையும் தயாரிக்கலாம்.
சிறுதானியங்களின் நன்மைகள் என்ன?
சிறுதானியங்கள்.. சின்ன தானியங்கள்… ‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பதைப்போல் சின்ன தானியங்களாக இருந்தாலும் அபரிவிதமான சத்துக்களைக் கொண்ட தானியங்களாக இவை உள்ளது. இரத்த சர்க்கரை, கொழுப்பு, உடல் பருமன், பலமற்ற எலும்புகள் என பல தொந்தரவுகளுக்கு மிக சிறந்த உணவு.
தினமும் எல்லா வேளைகளுக்கும் சிறுதானியங்களை உட்கொள்ளலாமா?
நாள் ஒன்றுக்கு ஒரு சிறுதானியம் என ஒரு வேளை மட்டும் எடுத்துக் கொள்வது சிறந்த பலனை அளிக்கும்.
எல்லா காலத்திற்கும் சிறு தானியங்களை எடுத்துக் கொள்ளலாமா?
சில தானியங்கள் உடலுக்கு, நாம் இருக்கும் இடத்திற்கும் ஏற்ப உடலுக்கு குளிர்ச்சியையும் உஷ்ணத்தையும் அளிக்கும். அதற்கேற்றவாறு நாம் இருக்கும் இடம், காலம், நேரத்திற்கு ஏற்ப எடுத்துக் கொள்வது சிறந்தது.
சிறுதானியங்களில் என்னென்ன சத்துக்கள் உள்ளது?
உடலுக்கு தேவையான நார்ச்சத்து, புரதம், வைட்டமின் சத்துக்கள் மற்றும் தாது சத்துக்கள் அதிகம் கொண்ட தானியங்கள் சிறு தானியங்கள்.
சிறுதானியங்களை இரவில் எடுத்துக் கொள்ளலாமா?
கூடுமான வரை சிறுதானிய உணவுகளை காலை அல்லது மதிய உணவாக எடுத்துக் கொள்வது சிறந்தது. சின்ன தானியங்கள் ஆனால் சத்துக்கள் மிக அதிகம், அவற்றை சூரிய அஸ்தமனத்திற்கு பின் உண்பதால் உடல் சீராக செரிமானம் செய்ய இயலாது. கஞ்சியாகவோ அல்லது எளிதாக செரிமானமாகும் வகையிலோ இரவு ஏழு மணிக்குள் எடுத்துக்கொள்ளவேண்டும்.
For more Millet FAQ, Do check our english site or comment us.