நார்ச்சத்துக்கள், புரதம், இரும்பு சத்து என பல பல சத்துக்கள் நிறைந்த சத்தான தானியங்கள் நம் பாரம்பரிய சிறுதானியங்கள்.
உடல் பருமன், நீரிழிவு போன்ற வாழ்வியல் தொந்தரவுகளுக்கு மிகசிறந்த உணவாகவும் இருக்கக்கூடியது.
இந்த சிருதானியங்களில் சுவையான பல உணவுகளை தயாரிக்க பெரியவர்கள் மட்டுமில்லாமல் சிறுவர்களும் விரும்பி உண்பார்கள்.
வரகு, சாமை, தினை, குதிரைவாலி ஆகிய சிறுதானியங்களை கீழிருக்கும் இணைப்புகளில் இருந்தும் பெற்றுக்கொள்ளலாம். பொதுவாக சிறுதானியங்கள் எந்தவிதமான ரசாயனங்கள், பூச்சி கொல்லிகள் இன்றி இயற்கையான முறையில் விளையக்கூடியது.
வரகு, சாமை, தினை, குதிரைவாலி ஆகிய தானியங்களை அமேசான் வலைதளத்தில் உள்ள இந்த இணைப்பிலிருந்து வாங்கிக்கொள்ளலாம் – சிறுதானியங்கள்
தேவையான பொருட்கள்
- ½ கப் வரகு
- ½ கப் சாமை
- ½ கப் தினை
- ½ கப் குதிரைவாலி
- ¼ கப் உளுந்த மாவு
- 2 கப் (கரைப்பதற்கு தேவையான அளவு) மோர்
- 2 மேசைக்கரண்டி கேரட்
- 2 மேசைக்கரண்டி பீன்ஸ்
- 2 மேசைக்கரண்டி முட்டைகோஸ்
- 2 மேசைக்கரண்டி குடைமிளகாய்
- 1 மேசைக்கரண்டி தேங்காய்துருவல்
- 1 தேக்கரண்டி மிளகு
- 1 தேக்கரண்டி சீரகம்
- 1 மேசைக்கரண்டி முந்திரி பருப்பு ((பொடித்தது))
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு செக்கு நல்லெண்ணெய்
செய்முறை
- கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், குடைமிளகாய் அனைத்தையும் மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.
- தேங்காயை துருவி வைக்கவும்.
- மிளகு, சீரகம், முந்திரிபருப்பு மூன்றையும் ஒன்றிரண்டாக பொடித்து வைக்கவும்.
- அடுப்பில் பாத்திரத்தை வைத்து சிறுதானியத்தை வறுத்து மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
- உளுந்த மாவையும் பச்சை வாசனை போகும் வரை வறுத்து வைக்கவும்.
- வறுத்து பொடித்த சிறுதானியம் மற்றும் உளுந்த மாவை ஒன்றாக போட்டு உப்பு சேர்த்து கலந்து அதனுடன் மோர் ஊற்றி கரைத்து அதில் பொடித்த மிளகு, சீரகம், முந்திரிபருப்பு மூன்றையும் சேர்க்கவும்.
- அதனுடன் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், குடைமிளகாய், தேங்காய்துருவல் அனைத்தையும் சேர்த்து கலக்கவும்.
- ஊத்தாப்பம் மாவு பதத்திற்கு கலந்த பிறகு தோசை கல்லை அடுப்பில் வைத்து ஒரு கரண்டி மாவை ஊற்றி நல்லெண்ணெய் சேர்த்து பின் ஊத்தாப்பம் இருபுறமும் வெந்ததும் எடுக்கவும்.
- சூடான சுவையான சத்துக்கள் நிறைந்த உத்தப்பம் தயார்.
- இதனை தேங்காய் அல்லது மல்லி சட்னியுடன் பரிமாறவும்.
சிறுதானிய ஊத்தப்பம்
நார்ச்சத்துக்கள், புரதம், இரும்பு சத்து என பல பல சத்துக்கள் நிறைந்த சத்தான தானியங்கள் நம் பாரம்பரிய சிறுதானியங்கள். உடல் பருமன், நீரிழிவு போன்ற வாழ்வியல் தொந்தரவுகளுக்கு மிகசிறந்த உணவாகவும் இருக்கக்கூடியது. இந்த சிருதானியங்களில் சுவையான பல உணவுகளை தயாரிக்க பெரியவர்கள் மட்டுமில்லாமல் சிறுவர்களும் விரும்பி உண்பார்கள்.
⏲️ ஆயத்த நேரம்
30 mins
⏲️ சமைக்கும் நேரம்
15 mins
🍴 பரிமாறும் அளவு
4
🍲 உணவு
காலை