உடல் பருமனுக்கு உகந்த உணவு. முளைகட்டிய உணவுகளை அதிலும் குறிப்பாக நிலக்கடலை, பச்சைப்பயறு உடலுக்கு தேவையான சத்துக்களையும் நார்ச் சத்தினையும், வைட்டமின் சத்துகளையும் அளிக்கிறது.ஒவ்வொரு நாளும் இவ்வாறான கலவைகளை தயரித்து காலை வேளையில் உட்கொள்ள நல்ல பலனளிக்கும்.
தேவையான பொருட்கள்
- 2 ஸ்பூன் வேகவைத்த வரகு
- 2 ஸ்பூன் வேகவைத்த பனி வரகு
- 2 ஸ்பூன் வேகவைத்த தினை
- 3 ஸ்பூன் முளைகட்டிய பாசிப்பயறு
- 2 ஸ்பூன் முளைகட்டிய ராகி
- 1 ஸ்பூன் முளைகட்டிய நிலக்கடலை
- 2 ஸ்பூன் துருவிய காரட்
- இந்து உப்பு
- 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு
- ¼ ஸ்பூன் மிளகு சீரகப் பொடி
செய்முறை
பாசிப்பயறு, ராகி மற்றும் நிலக்கடலை ஆகியவற்றை முதல் நாளே 8 மணி நேரம் ஊறவைத்து, வலை போல் இருக்கும் துணியில் 8 மணி நேரம் வைத்தால் அவை முளைத்து விடும்.
பாசிப்பயறு முளைக்கட்டுவது எவ்வாறு என தெரிந்துகொள்ள – இந்த காணொளியை பார்க்கவும்.
நிலக்கடலை / வேர்கடலை எவ்வாறு முளைகட்டுவது என தெரிந்துக்கொள்ள – இந்த காணொளியை பார்க்கவும்.
இவ்வாறு ராகியையும், பயிரையும் முளைகட்டிக்கொள்ள வேண்டும்.
வரகு, பனி வரகு மற்றும் தினையை சற்று ஊறவைத்து தண்ணீருடன் சேர்த்து 5 நிமிடம் வேகவைத்தால் நன்கு வெந்துவிடும்.
அவற்றையும் உதிரியாக வடித்துக்கொண்டு தயாராக எடுத்துக் கொள்ளவேண்டும்.
மேலே கொடுத்துள்ள எல்லா பொருட்களையும் தயாராக முதலில் எடுத்துக்கொண்டு அவற்றை தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறிக்கொள்ள வேண்டும்.
சுவையான சிறுதானிய சாலட் தயார்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பு உண்ண சிறந்த சத்தான மாலை சிற்றுண்டி.
சிறுதானிய சாலட்
தேவையான பொருட்கள்
- 2 ஸ்பூன் வேகவைத்த வரகு
- 2 ஸ்பூன் வேகவைத்த பனி வரகு
- 2 ஸ்பூன் வேகவைத்த தினை
- 3 ஸ்பூன் முளைகட்டிய பாசிப்பயறு
- 2 ஸ்பூன் முளைகட்டிய ராகி
- 1 ஸ்பூன் முளைகட்டிய நிலக்கடலை
- 2 ஸ்பூன் துருவிய காரட்
- இந்து உப்பு
- 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு
- ¼ ஸ்பூன் மிளகு சீரகப் பொடி
செய்முறை
- பாசிப்பயறு, ராகி மற்றும் நிலக்கடலை ஆகியவற்றை முதல் நாளே 8 மணி நேரம் ஊறவைத்து, வலை போல் இருக்கும் துணியில் 8 மணி நேரம் வைத்தால் அவை முளைத்து விடும்.
- இவ்வாறு ராகியையும், பயிரையும் முளைகட்டிக்கொள்ள வேண்டும்.
- வரகு, பனி வரகு மற்றும் தினையை சற்று ஊறவைத்து தண்ணீருடன் சேர்த்து 5 நிமிடம் வேகவைத்தால் நன்கு வெந்துவிடும்.
- அவற்றையும் உதிரியாக வடித்துக்கொண்டு தயாராக எடுத்துக் கொள்ளவேண்டும்.
- மேலே கொடுத்துள்ள எல்லா பொருட்களையும் தயாராக முதலில் எடுத்துக்கொண்டு அவற்றை தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறிக்கொள்ள வேண்டும்.
- சுவையான சிறுதானிய சாலட் தயார்.
- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பு உண்ண சிறந்த சத்தான மாலை சிற்றுண்டி.