மொறு மொறுன்னு எந்த உணவை கொடுத்தாலும் குழந்தைகளுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே பிடிக்கும். அதிலும் சத்துக்கள் நிறைந்த சிறுதானியங்களை பயன்படுத்தி ஒரு அருமையான மாலை சிற்றுண்டி சிறுதானிய ரோல் செய்துகொடுக்க குழந்தைகள் விரும்பி உண்பார்கள். மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் சிறுதானிய ரோல்.
தேவையான பொருட்கள்
- ¼ கப் சிறுதானிய மாவு (வரகு மாவு, சாமை மாவு, தினை மாவு, குதிரைவாலி மாவு இவற்றில் ஏதேனும் ஒரு சிறுதானிய மாவு )
- ½ கப் சிறு சோளம் மாவு
- ¼ கப் கோதுமை மாவு
- 3 வெங்காயம்
- 1௦ பல் பூண்டு
- ¼ ஸ்பூன் மிளகாய் தூள்
- 1 சிட்டிகை மஞ்சள் தூள்
- நல்லெண்ணெய்
- உப்பு
செய்முறை
சிறுதானிய மாவு, சிறு சோளம் மாவு மற்றும் கோதுமை மாவை உப்பு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.
வெங்காயம், பூண்டினை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
பிறகு அதனுடன் நறுக்கிய பூண்டை சேர்த்து வதக்கவும்.
இந்தக் கலவை நன்கு வதங்கியதும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
பின் பிசைந்து வைத்திருக்கும் மாவினில் சிறிது அளவு உருட்டி உருண்டையாக கொள்ளவும்.
பின் அதனை சப்பாத்திக்கு தேய்ப்பது போல் தேய்த்து அதனுள் தயாரான மசாலா கலவையை நடுவில் வைத்து ரோல் செய்து கொள்ளவும்.
வாணலியில் பொரிப்பதற்கு தேவையான நல்லெண்ணையை ஊற்றி காய்ந்ததும் ரோல் செய்தவற்றை பொரித்து எடுக்கவும்.
எளிதாக குழந்தைகள் விரும்பும் சிறுதானிய ரோல் தயார்.
இதனில் காய்கறிகளையும் சேர்த்து மசாலா தயாரிக்கலாம்.
சத்தானதாகவும், சுவையானதாகவும் இருக்கும்.
சிறுதானிய ரோல்
தேவையான பொருட்கள்
- ¼ கப் சிறுதானிய மாவு (வரகு மாவு, சாமை மாவு, தினை மாவு, குதிரைவாலி மாவு இவற்றில் ஏதேனும் ஒரு சிறுதானிய மாவு )
- ½ கப் சிறு சோளம் மாவு
- ¼ கப் கோதுமை மாவு
- 3 வெங்காயம்
- 1௦ பல் பூண்டு
- ¼ ஸ்பூன் மிளகாய் தூள்
- 1 சிட்டிகை மஞ்சள் தூள்
- நல்லெண்ணெய்
- உப்பு
செய்முறை
- சிறுதானிய மாவு, சிறு சோளம் மாவு மற்றும் கோதுமை மாவை உப்பு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.
- வெங்காயம், பூண்டினை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
- வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
- வெங்காயம் நன்கு வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
- பிறகு அதனுடன் நறுக்கிய பூண்டை சேர்த்து வதக்கவும்.
- இந்தக் கலவை நன்கு வதங்கியதும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
- பின் பிசைந்து வைத்திருக்கும் மாவினில் சிறிது அளவு உருட்டி உருண்டையாக கொள்ளவும்.
- பின் அதனை சப்பாத்திக்கு தேய்ப்பது போல் தேய்த்து அதனுள் தயாரான மசாலா கலவையை நடுவில் வைத்து ரோல் செய்து கொள்ளவும்.
- வாணலியில் பொரிப்பதற்கு தேவையான நல்லெண்ணையை ஊற்றி காய்ந்ததும் ரோல் செய்தவற்றை பொரித்து எடுக்கவும்.
- எளிதாக குழந்தைகள் விரும்பும் சிறுதானிய ரோல் தயார்.
- இதனில் காய்கறிகளையும் சேர்த்து மசாலா தயாரிக்கலாம்.
- சத்தானதாகவும், சுவையானதாகவும் இருக்கும்.