சிறு சோள வரகு தோசை

நீரிழிவு நோய் செரிமான குறைகள், ரத்தசோகை, சர்க்கரை நோய் முதலியவற்றிலிருந்து நம்மை காக்கவும் வந்த நோயை போக்கவும் உதவும் நம் சோளம்.

சோளம் என்றவுடன் பலருக்கு மஞ்சள் நிறத்தில் இருக்கும் மக்கா சோளம் அல்லது பேபி கார்ன் போன்றவை நினைவிற்கு வரும், அனால் சிறுதானிய வகையில் நாம் குறிப்பிடும் சோளம் அதுவல்ல. அதைவிட சிறிதாகவும் வெள்ளை, சிகப்பு நிறத்தில் இருக்கும் சோளத்தையே இங்கு நாம் குறிப்பிடுகிறோம்.

சிகப்பு நிற சோளம் கண் குறைபாடுகளை சீர் செய்யும் ‘பீட்டா கரோட்டினை’ அதிகம் கொண்டுள்ளது. சோளத்தில் அடை, வடை, புட்டு, இட்லி, தோசை, பணியாரம் சுவையாக இருக்கும். எளிதாக சோளத்தை முளைக்கட்டி சுண்டலாகவும் உண்ணலாம். 

மேலும் சிறு சோளத்தின் பயன்கள் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ள இங்கு தொடரவும் – சிறுசோளம்.

மற்ற சிறுதானியங்கள் பற்றிய நன்மைகள் மற்றும் பயன்கள் பற்றி தெரிந்துகொள்ள – சிறுதானியங்கள்.

தேவையான பொருட்கள்

  • 2 கப் சிறு சோளம்
  • ½ கப் வரகரிசி
  • 10 சின்ன வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • சிறிது கறிவேப்பிலை
  • சிறிது கொத்துமல்லி
  • தேவையான அளவு உப்பு
  • செக்கு நல்ல எண்ணெய்

செய்முறை

வெள்ளை அல்லது சிகப்பு சிறு சோளத்தை முதலில் தண்ணீர் தெளித்து வைத்து சிறிது நேரத்திற்குப் பின் லேசாக மிக்ஸ்யில் ஓட்டி எடுக்கவும்.

உமி தனியாக வரும் வரை ஓட்டி எடுக்கவும். பின் உமியை புடைத்து எடுக்கவும். 

பின் சோளத்தை, வரகரிசியுடன் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு கிரைண்டரில் போட்டு நைசாக அரைக்கவும்.

வாணலியில் நறுக்கிய வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி, உப்பு சேர்த்து கரைத்து மெல்லிய தோசைகளாக ஊற்றி, சுற்றிலும்  நல்ல எண்ணெய் விட்டு, சுட்டு எடுக்கவும்.

சிறு சோள வரகு தோசை

நீரிழிவு நோய் செரிமான குறைகள், ரத்தசோகை, சர்க்கரை நோய் முதலியவற்றிலிருந்து நம்மை காக்கவும் வந்த நோயை போக்கவும் உதவும் நம் சோளம். சோளம் என்றவுடன் பலருக்கு மஞ்சள் நிறத்தில் இருக்கும் மக்கா சோளம் அல்லது பேபி கார்ன் போன்றவை நினைவிற்கு வரும், அனால் சிறுதானிய வகையில் நாம் குறிப்பிடும் சோளம் அதுவல்ல. அதைவிட சிறிதாகவும் வெள்ளை, சிகப்பு நிறத்தில் இருக்கும் சோளத்தையே இங்கு நாம் குறிப்பிடுகிறோம். அதிலும் இந்த சிகப்பு நிற சோளம் கண் குறைபாடுகளை சீர் செய்யும் 'பீட்டா கரோட்டினை' அதிகம் கொண்டுள்ளது. சோளத்தில் அடை, வடை, புட்டு, இட்லி, தோசை, பணியாரம் சுவையாக இருக்கும். எளிதாக சோளத்தை முளைக்கட்டி சுண்டலாகவும் உண்ணலாம். 
ஆயத்த நேரம் : – 4 hours
சமைக்கும் நேரம் : – 15 minutes
பரிமாறும் அளவு : – 4

தேவையான பொருட்கள்

  • 2 கப் சிறு சோளம்
  • ½ கப் வரகரிசி
  • 10 சின்ன வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • சிறிது கறிவேப்பிலை
  • சிறிது கொத்துமல்லி
  • தேவையான அளவு உப்பு
  • செக்கு நல்ல எண்ணெய்

செய்முறை

  • வெள்ளை அல்லது சிகப்பு சிறு சோளத்தை முதலில் தண்ணீர் தெளித்து, பிசிறி, மிக்சியில் போட்டு, ஒரு ஓட்டு ஓட்டி எடுக்கவும்.
  • உமி தனியாக வரும், வராவிட்டால் இன்னொரு முறை போட்டு எடுத்து, உமியை புடைத்து எடுக்கவும். 
  • பின் சோளத்தை, வரகரிசியுடன் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பிறகு கிரைண்டரில் போட்டு நைசாக அரைக்கவும்.
  • வாணலியில் நறுக்கிய வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி, உப்பு சேர்த்து கரைத்து மெல்லிய தோசைகளாக ஊற்றி, சுற்றிலும்  நல்ல எண்ணெய் விட்டு, சுட்டு எடுக்கவும்.