குழந்தைகள் விரும்பி உண்ண ஏற்ற மாலை சிறுதானியப் பலகாரம். வரகு தேங்காய் வடை மிக எளிமையாக தயாரிக்க முடியும். வரகரிசி பலவிதமான ஊட்டசத்துக்களைக் கொண்ட சிறுதானியமாகும்.
தேவையான பொருட்கள்
- 250 கிராம் வரகரிசி
- 1½ மூடி தேங்காய்
- செக்கு கடலை எண்ணெய்
- 50 கிராம் சிறு சோளம் மாவு
- 6 மிளகாய் வற்றல்
- பெருங்காயம்
செய்முறை
- வரகரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும்.
- துருவிய தேங்காயுடன் பெருங்காயம், உப்பு, மிளகாய் மற்றும் வரகரிசியை கெட்டியாக அரைக்கவும்.
- அதனுடன் சிறு சோள மாவு, கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பிசைந்து வைக்கவும்.
- மாவில் தண்ணீர் கூடிவிட்டால் சிறிது சிறு சோள மாவு சேர்த்துக் கொள்ளலாம்.
- இதனை சிறிது சிறிது வடைகளாக தட்டி எண்ணையில் போட்டு இரண்டு பக்கமும் சிவக்க விட்டு எடுக்கவும்.
- இதற்கு வெங்காயச் சட்னி, புதினா சட்னி பொருத்தமாக இருக்கும்.
- குழந்தைகள் விரும்பி உண்ண ஏற்ற மாலை சிறுதானியப் பலகாரம்.
வரகு தேங்காய் வடை
குழந்தைகள் விரும்பி உண்ண ஏற்ற மாலை சிறுதானியப் பலகாரம்.
⏲️ ஆயத்த நேரம்
30 mins
⏲️ சமைக்கும் நேரம்
10 mins
🍴 பரிமாறும் அளவு
5
🍲 உணவு
வடை