புரதம், நார்ச்சத்துக்கள் மட்டுமில்லாமல் வைட்டமின் சத்துக்களும், தாதுச் சத்துக்களும் நிறைந்த தானியங்கள் நம் சிறுதானியங்கள். சாதாரணமாக வெள்ளை அரிசி மாவில் தயாரிக்கும் புட்டை விட பலபல மடங்கு சத்துக்கள் நிறைந்த புட்டு இந்த சிறுதானிய புட்டு. உடலுக்கு ஊட்டமளிக்கும் கேழ்வரகு, கம்பு, வரகு, குதிரைவாலி, தினை, சாமை, பனிவரகு தானியங்கள் சேர்ந்த புட்டு.
அனைத்து தானியங்களை சேர்த்தும் இதனை செய்யலாம் அல்லது ஏதேனும் சில தானியங்களை மட்டும் கூட சேர்த்து செய்யலாம்.
இந்த சிறுதானியங்களின் பயன்கள், சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்களை தெரிந்துக்கொள்ள இங்கு இணையவும் – சிறுதானியங்கள்.
உடல் பருமன், நீரிழிவு, எலும்பு தேய்மானம் உள்ளவர்களுக்கும் வளரும் குழந்தைகள் பெண்களுக்கும் ஏற்ற சிறந்த உணவு இந்த சிறுதானிய புட்டு. மாலை நேரத்தில் உட்கொள்ள சிறந்த சிறுதானிய புட்டு.
தேவையான பொருட்கள்
- ¼ கப் ராகி மாவு / முளைக்கட்டிய கேழ்வரகு மாவு
- ¼ கப் நாட்டுக் கம்பு மாவு / முளைக்கட்டிய கம்பு மாவு
- ¼ கப் வரகு, சாமை, தினை, குதிரைவாலி, பனிவரகு சேர்த்த மாவு
- 1 சிறியது தேங்காய்
- உப்பு
செய்முறை
அனைத்து மாவையும் தேவையான அளவு தண்ணீர் தெளித்து, தேவைக்கு உப்பு சேர்த்து கிளறவும்.
கிளறிய மாவை அப்படியே சிறிது நேரம் வைத்திருக்கவும்.
மாவை மிக்ஸி போட்டு மூன்று சுற்று சுற்றி எடுக்கவும்.
மாவு பூப்போல ஆகிவிடும்.
தேங்காயை துருவிக் கொள்ளவும்.
பின் தேங்காய் சிரட்டை / கொட்டங்கச்சியை எடுத்துக்கொண்டு அதன் உள் முதலில் தேங்காய் துருவலை வைத்து பின்பு மாவை வைத்து நிறப்பவும்.
அதன் மேல் மீண்டும் தேங்காய் துருவலை வைத்து நிறப்பவும்.
அடுத்ததாக இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிவந்ததும் அதில் இந்த தேங்காய் சிரட்டையில் நிரம்பியுள்ள மாவு கலவையை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
அல்லது குக்கரை அடுப்பில் வைத்து அதன் மேல் ஆவி வந்தபின் விசில் போடும் இடத்தில் இந்த தேங்காய் சிரட்டையை வைத்து அதன் மேல் ஆவிவந்தபின் அடுப்பை அணைத்து எடுக்கவும்.
சூடான சுவையான சிறுதானிய புட்டு தயார்.
சிறுதானிய சிரட்டை புட்டு
தேவையான பொருட்கள்
- ¼ கப் ராகி மாவு (முளைக்கட்டிய கேழ்வரகு மாவு)
- ¼ கப் நாட்டுக் கம்பு மாவு (முளைக்கட்டிய கம்பு மாவு)
- ¼ கப் வரகு, சாமை, தினை, குதிரைவாலி, பனிவரகு சேர்த்த மாவு
- 1 சிறியது தேங்காய்
- உப்பு
செய்முறை
- அனைத்து மாவையும் தேவையான அளவு தண்ணீர் தெளித்து, தேவைக்கு உப்பு சேர்த்து கிளறவும்.
- கிளறிய மாவை அப்படியே சிறிது நேரம் வைத்திருக்கவும்.
- மாவை மிக்ஸி போட்டு மூன்று சுற்று சுற்றி எடுக்கவும்.
- மாவு பூப்போல ஆகிவிடும்.
- தேங்காயை துருவிக் கொள்ளவும்.
- பின் தேங்காய் சிரட்டை / கொட்டங்கச்சியை எடுத்துக்கொண்டு அதன் உள் முதலில் தேங்காய் துருவலை வைத்து பின்பு மாவை வைத்து நிறப்பவும்.
- அதன் மேல் மீண்டும் தேங்காய் துருவலை வைத்து நிறப்பவும்.
- அடுத்ததாக இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிவந்ததும் அதில் இந்த தேங்காய் சிரட்டையில் நிரம்பியுள்ள மாவு கலவையை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
- அல்லது குக்கரை அடுப்பில் வைத்து அதன் மேல் ஆவி வந்தபின் விசில் போடும் இடத்தில் இந்த தேங்காய் சிரட்டையை வைத்து அதன் மேல் ஆவிவந்தபின் அடுப்பை அணைத்து எடுக்கவும்.