நாட்டு கம்பு, கேழ்வரகு, வரகு, சாமை போன்ற சிறுதானியங்கள் நார்ச்சத்து, இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, புரதம் மற்றும் தாது உப்புகள் கொண்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணகூடியது.
உடல் பருமன் மற்றும் சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு. இதை தனியாகவும் அல்லது கார சட்னி யுடனும் சாப்பிடலாம்.
நார்சத்து, இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, புரதம் மற்றும் தாது உப்புகள் கொண்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணகூடியது.
தேவையான பொருட்கள்
- ¼ கப் நாட்டு கம்பு மாவு
- ¼ கப் ராகி மாவு
- 2 ஸ்பூன் வரகு மாவு
- 2 ஸ்பூன் சாமை மாவு
- 2 ஸ்பூன் தினை மாவு
- 2 ஸ்பூன் கோதுமை மாவு
- 2 ஸ்பூன் தேங்காய் கொப்பரை துருவல்
- ½ ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- ½ ஸ்பூன் கருப்பு எள்ளு
- சிறிது சீரகம்
- ¼ ஸ்பூன் மிளகாய் தூள்
- ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்
- சிறிது பெருங்காயம்
- இந்து உப்பு
- செக்கு கடலை எண்ணெய்
செய்முறை
அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து வெது வெதுப்பான தண்ணீரில் சிறிது சிறிதாக மாவில் ஊற்றி நன்கு பிசைந்து மெது மெதுப்பான உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்.
- பின்பு அந்த உருண்டையை தரையில் வைத்து 8 – 10 நிமிடங்கள் வரை நன்கு மெது மெதுப்பாகும் வரை பிசைந்து கொள்ளவும்.
- பிசைந்த மாவை அப்படியே ஈரமான துணியில் சுற்றி அல்லது ஒரு பாத்திரத்தில் மூடியை உட்புறமாக நீரால் துடைத்து, மூடிவைக்கவும்.
- குறைந்தது ஒருமணி நேரம் கழித்து, மாவை எடுத்து மீண்டும் அடித்துப் பிசைந்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
- மாவு தோய்த்து, மெல்லிய சப்பாத்திகளாக இட்டு (மிக மெல்லிதாக இடவரும்.)
- நிதானமான சூட்டில் தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் சில துளிகள் எண்ணெய் விடவும்.
- திருப்பிப் போட்டு விரும்பினால் இன்னும் சில துளிகள் எண்ணெய் விட்டு தோசைத் திருப்பியால் சுற்றி அழுத்திக் கொடுத்து திருப்பவும்.
- இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும், கல்லிலிருந்து எடுத்துப் பரிமாறலாம்.
- சுடான சிறுதானிய ரொட்டி தயார்.
சிறுதானிய மசாலா ரொட்டி
உடல் பருமன் மற்றும் சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு. இதை தனியாகவும் அல்லது கார சட்னி யுடனும் சாப்பிடலாம். நார்சத்து, இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, புரதம் மற்றும் தாது உப்புகள் கொண்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணகூடியது.
பரிமாறும் அளவு : – 2
தேவையான பொருட்கள்
- ¼ கப் நாட்டு கம்பு மாவு
- ¼ கப் ராகி மாவு
- 2 ஸ்பூன் வரகு மாவு
- 2 ஸ்பூன் சாமை மாவு
- 2 ஸ்பூன் தினை மாவு
- 2 ஸ்பூன் கோதுமை மாவு
- 2 ஸ்பூன் தேங்காய் கொப்பரை துருவல்
- ½ ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- ½ ஸ்பூன் கருப்பு எள்ளு
- சிறிது சீரகம்
- ¼ ஸ்பூன் மிளகாய் தூள்
- ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்
- சிறிது பெருங்காயம்
- இந்து உப்பு
- செக்கு கடலை எண்ணெய்
செய்முறை
- அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து வெது வெதுப்பான தண்ணீரில் சிறிது சிறிதாக மாவில் ஊற்றி நன்கு பிசைந்து மெது மெதுப்பான உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்.
- பின்பு அந்த உருண்டையை தரையில் வைத்து 8 – 10 நிமிடங்கள் வரை நன்கு மெது மெதுப்பாகும் வரை பிசைந்து கொள்ளவும்.
- பிசைந்த மாவை அப்படியே ஈரமான துணியில் சுற்றி அல்லது ஒரு பாத்திரத்தில் மூடியை உட்புறமாக நீரால் துடைத்து, மூடிவைக்கவும்.
- குறைந்தது ஒருமணி நேரம் கழித்து, மாவை எடுத்து மீண்டும் அடித்துப் பிசைந்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
- மாவு தோய்த்து, மெல்லிய சப்பாத்திகளாக இட்டு (மிக மெல்லிதாக இடவரும்.)
- நிதானமான சூட்டில் தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் சில துளிகள் எண்ணெய் விடவும்.
- திருப்பிப் போட்டு விரும்பினால் இன்னும் சில துளிகள் எண்ணெய் விட்டு தோசைத் திருப்பியால் சுற்றி அழுத்திக் கொடுத்து திருப்பவும்.
- இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும், கல்லிலிருந்து எடுத்துப் பரிமாறலாம்.
- சுடான சிறுதானிய ரொட்டி தயார்.
குறிப்புகள்
நாட்டு கம்பு, கேழ்வரகு, வரகு, சாமை போன்ற சிறுதானியங்கள் நார்ச்சத்து, இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, புரதம் மற்றும் தாது உப்புகள் கொண்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணகூடியது. உடல் பரும்மன் மற்றும் சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு. இதை தனியாகவும் அல்லது கார சட்னி யுடனும் சாப்பிடலாம்.