சாதாரணமாக செய்யும் கேசரியைவிட பல மடங்கு சத்துக்கள் அதிகம் கொண்ட சிறுதானிய கேசரி. இதனை எளிதாக செய்து குழந்தைகளுக்கு கொடுக்க உடல் பலப்படும், எலும்புகள் வலுபெறும். For Barnyard Kesari Recipe in English.
தேவையான பொருட்கள்
- 1 கப் குதிரைவாலி அரிசி குருணை
- 1 கப் பனஞ் சர்க்கரை
- 1/4 கப் பசும்பால்
- 4 ஸ்பூன் பசு நெய்
- 10 முந்திரி
- 10 திராட்சை
செய்முறை
- நான்கு பங்கு நீருடன் பால் சேர்த்து அதில் குதிரைவாலி அரிசி குருணையை சேர்த்து நன்கு அடி கனமான பாத்திரத்தில் கொதிக்க விட வேண்டும்.
- மஞ்சள் தூள் அல்லது குங்குமப்பூ சேர்க்கலாம்.
- குதிரைவாலி அரிசி நன்கு வெந்து குழைந்த பின் பனஞ் சர்க்கரை சேர்த்து சிறிது வேகவிட்டு அடுப்பை அணைக்கவும்.
- ஒரு வாணலியில் பசுநெய் சேர்த்து அதில் முந்திரி, திராட்சை வறுத்து சேர்க்கவும்.
- அவ்வளவுதான் சுவையான இயற்கை குதிரைவாலி கேசரி தயார்.
குதிரைவாலி கேசரி
சாதாரணமாக செய்யும் கேசரியைவிட பல மடங்கு சத்துக்கள் அதிகம் கொண்ட சிறுதானிய கேசரி. இதனை எளிதாக செய்து குழந்தைகளுக்கு கொடுக்க உடல் பலப்படும், எலும்புகள் வலுபெறும்.