சிறுதானிய உணவுகளில் எளிதாக செய்யக்கூடிய அதே நேரம் சிறந்த சத்துக்களையும் கொண்ட ஒரு தின்பண்டம் கம்பு பக்கோடா. பொதுவாக அனைத்து வீடுகளிலும் இருக்க வேண்டிய சிறுதானிய மாவுகளில் கேழ்வரகும், கம்பும் பிரதானமானது. சுவையில் எந்த சமரசமும் இன்றி பொதுவாக செய்யக்கூடிய பக்கோடாவை போன்ற சுவையை அளிக்கும் உணவு. அளவோடு உட்கொள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.
தேவையான பொருட்கள்
- 1/2 கப் கம்பு மாவு
- 1/2 கப் கடலை மாவு
- 1/2 கப் அரிசி மாவு
- 1/2 கப் சின்ன வெங்காயம்
- 1 ஸ்பூன் இஞ்சி விழுது
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
- சிறிது பெருங்காயம்
- சிறிது கருவேப்பில்லை
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
- கம்பு மாவு, கடலை மாவு, அரிசி மாவு ஆகியவற்றை ஒன்றாக கலந்து அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், இஞ்சி விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயம், கருவேப்பில்லை, உப்பு சேர்த்து அதனுடன் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
- அடுப்பில் இரும்பு வாணலியை வைத்து அதில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்ற வேண்டும்.
- எண்ணெய் சூடானதும் பிசறி வைத்திருக்கும் மாவை சிறிது சிறிதாக எடுத்து எண்ணெயில் போடா வேண்டும்.
- அடுப்பை தேவைக்கேற்ப குறைத்தும், கூட்டியும் மொறுமொறுப்பாக வேகவிட்டு எடுக்கவும்.
- மாலை நேரத்திற்கு ஏற்ற சுவையான கம்பு பக்கோடா தயார்.
கம்பு பக்கோடா
சிறுதானிய உணவுகளில் எளிதாக செய்யக்கூடிய அதே நேரம் சிறந்த சத்துக்களையும் கொண்ட ஒரு தின்பண்டம் கம்பு பக்கோடா.
⏲️ ஆயத்த நேரம்
5 mins
⏲️ சமைக்கும் நேரம்
10 mins
🍴 பரிமாறும் அளவு
4
🍲 உணவு
தின்பண்டம்