சத்துக்கள் நிறைந்த நம் பாரம்பரிய தானியங்கள் இந்த சிறுதானியங்கள். அன்றாடம் இதனை சிறிதளவாவது உட்கொள்ள உடலுக்கு தேவையான ஊட்டசத்துக்களை எளிமையாக பெறுவதோடு சத்து குறைபாடு என்ற தொந்தரவு மறையும் மேலும் உடல் ஆரோக்கியம் மேம்பட உதவும்.
நீரிழிவு, உடல் பருமம் என பல பல நோய்களுக்கு சிறந்த மருந்தாக விளங்கும் உணவாகவும் உள்ளது. உடல் உஷ்ணத்தை சமநிலைப்படுத்தும் சிறந்த காலை உணவு.
உடல் உஷ்ணத்தை குறைக்கும் சிறந்த சிறுதானியம் நம் நாட்டுக் கம்பு. மேலும் நாட்டுக் கம்பின் பயன்கள், சத்துகள் மற்றும் நன்மைகளை தெரிந்துக்கொள்ள – நாட்டுக் கம்பு / Pearl Millet in Tamil / Bajra in Tamil.
வரகு அரிசி சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு சிறந்த அன்றாட உணவாகும். கால்லீரல் செயல்பாட்டிற்கு நல்லது. உடலுக்கு தேவையான ஜீரண நீர் மற்றும் நிணநீரை சீராக சுரக்க உதவுகிறது.
மேலும் வரகரிசியின் பயன்கள், சத்துகள் மற்றும் நன்மைகளை தெரிந்துக்கொள்ள – வரகு அரிசி / Kodo Millet in Tamil.
நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து நிறைந்தது குதிரைவாலி தானியம். மேலும் குதிரைவாலியைப் பற்றி தெரிந்துக்கொள்ள – குதிரைவாலி / Barnyard Millet in Tamil.
இனி இந்த சிறுதானியங்களை வைத்து எவ்வாறு மிருதுவான ஆரோக்கியமான எளிதில் ஜீரணிக்கக்கூடிய இட்லி தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்
- 1 கப் நாட்டுக் கம்பு
- 1 கப் வரகு
- 1 கப் குதிரைவாலி
- 1 கப் இட்லி அரிசி
- 1 கப் உளுந்து
- 1 ஸ்பூன் வெந்தயம்
- உப்பு
செய்முறை
- முதலில் கம்பு, வரகு, குதிரைவாலி மற்றும் இட்லி அரிசியை வெந்தயத்துடன் ஒன்றாக கழுவி மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.
- உளுந்தை ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்.
- பின் முதலில் உளுந்தையும் அதன்பின் மற்ற தானியங்களையும் மிருதுவாக அரைத்து உப்புடன் கலந்து எட்டுமணிநேரம் புளிக்கவைக்கவும்.
- சிறுதானிய இட்லி மாவு தயார்.
- இதனை இட்லி தட்டில் ஊற்றி ஆவியில் வேகவைத்து தக்காளி சட்னியுடன் பரிமாறலாம்.
சிறுதானிய இட்லி
தேவையான பொருட்கள்
- 1 கப் நாட்டுக் கம்பு
- 1 கப் வரகு
- 1 கப் குதிரைவாலி
- 1 கப் இட்லி அரிசி
- 1 கப் உளுந்து
- 1 ஸ்பூன் வெந்தயம்
- உப்பு
செய்முறை
- முதலில் கம்பு, வரகு, குதிரைவாலி மற்றும் இட்லி அரிசியை வெந்தயத்துடன் ஒன்றாக கழுவி மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.
- உளுந்தை ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்.
- பின் முதலில் உளுந்தையும் அதன்பின் மற்ற தானியங்களையும் மிருதுவாக அரைத்து உப்புடன் கலந்து எட்டுமணிநேரம் புளிக்கவைக்கவும்.
- சிறுதானிய இட்லி மாவு தயார்.
- இதனை இட்லி தட்டில் ஊற்றி ஆவியில் வேகவைத்து தக்காளி சட்னியுடன் பரிமாறலாம்.