புரதம், நார்ச்சத்துக்கள் மட்டுமில்லாமல் வைட்டமின் சத்துக்களும், தாதுச் சத்துக்களும் நிறைந்த தானியங்கள் நம் சிறுதானியங்கள்.
அனைத்து தானியங்களை சேர்த்தும் இதனை செய்யலாம் அல்லது ஏதேனும் சில தானியங்களை மட்டும் கூட சேர்த்து செய்யலாம்.
சிறுதானியங்களின் பயன்கள், சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்களை தெரிந்துக்கொள்ள இங்கு இணையவும் – சிறுதானியங்கள்.
குழந்தைகள் விரும்பி உண்ணும் சத்தான உணவு. வளரும் குழந்தைகளுக்கு தேவையான சுண்ணாம்பு மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்த சிறுதானிய பஜ்ஜி. விரைவாக தயாரிக்கக்கூடிய எளிமையான மாலை உணவு.
தேவையான பொருட்கள்
- 2 குடைமிளகாய்
- ¼ கப் முளைக்கட்டிய கேழ்வரகு மாவு
- ¼ கப் முளைக்கட்டிய கம்பு மாவு
- 2 ஸ்பூன் இஞ்சி விழுது
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- 1 சிட்டிகை மஞ்சள் தூள்
- உப்பு
- செக்கு நல்லஎண்ணெய்
செய்முறை
குடைமிளகாய்யை விதைகள் நீக்கி நீளமாக சிறுசிறு துண்டுகளாக முதலில் நறுக்கிக் கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, கம்பு மாவு, இஞ்சி விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் தேவையான உப்பு சேர்த்து சிறிது தண்ணீருடன் பஜ்ஜி மாவு பதத்திற்கு தயார் செய்யவும்.
ஒரு வாணலியில் தேவையான நல்லஎண்ணெய்யை ஊற்றி சூடு செய்யவும். பின் நறுக்கிய குடைமிளகாயை ஒவ்வொன்றாக தயாரித்து வைத்திருக்கும் கம்பு கேழ்வரகு பஜ்ஜி மாவில் விட்டு எண்ணெயில் பொரிக்கவும்.
நன்கு மொறுமொறு என்று வெந்த பஜ்ஜியை எடுத்து சின்ன வெங்காய சட்னியுடன் பரிமாறவும்.
சுவையான இந்த சிறுதானிய பஜ்ஜி குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் விருப்பமான ஒன்றாக இருக்கும்.
குடைமிளகாய் சிறுதானிய பஜ்ஜி
தேவையான பொருட்கள்
- 2 குடைமிளகாய்
- ¼ கப் கேழ்வரகு மாவு
- ¼ கப் கம்பு மாவு
- 2 ஸ்பூன் இஞ்சி விழுது
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- 1 சிட்டிகை மஞ்சள் தூள்
- உப்பு
- செக்கு நல்லஎண்ணெய்
செய்முறை
- குடைமிளகாய்யை விதைகள் நீக்கி நீளமாக சிறுசிறு துண்டுகளாக முதலில் நறுக்கிக் கொள்ளவும்.
- பின் ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, கம்பு மாவு, இஞ்சி விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் தேவையான உப்பு சேர்த்து சிறிது தண்ணீருடன் பஜ்ஜி மாவு பதத்திற்கு தயார் செய்யவும்.
- ஒரு வாணலியில் தேவையான நல்லஎண்ணெய்யை ஊற்றி சூடு செய்யவும். பின் நறுக்கிய குடைமிளகாயை ஒவ்வொன்றாக தயாரித்து வைத்திருக்கும் கம்பு கேழ்வரகு பஜ்ஜி மாவில் விட்டு எண்ணெயில் பொரிக்கவும்.
- நன்கு மொறுமொறு என்று வெந்த பஜ்ஜியை எடுத்து சின்ன வெங்காய சட்னியுடன் பரிமாறவும்.
- சுவையான இந்த சிறுதானிய பஜ்ஜி குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் விருப்பமான ஒன்றாக இருக்கும்.