சங்க காலத்திலிருந்து நமது தமிழகத்திற்கு பரிச்சயமான ஒரு தானியம் தினை. இதனைக் கொண்டு பல பல உணவுகளை செய்து அன்றாடம் உண்ணலாம். அதேபோல் வெறும் தினையைக் கொண்டு சிறுதானிய சப்பாத்தி / ரொட்டியும் செய்யலாம்.
தினையுடன் எளிமையாக கோதுமை சேர்த்து சப்பாத்தியும் செய்ய அனைவரும் விரும்பி உண்பார்கள். இதன் மணமும், சுவையும் அபாரமாக இருக்கும். குளிர் காலத்திற்கு ஏற்ற உணவு.
தேவையான பொருட்கள்
- 1 கப் தினை மாவு
- 1/2 கப் கோதுமை மாவு
- உப்பு
- கடலை எண்ணெய்
செய்முறை
- தினை மாவு, கோதுமை மாவு, உப்பு சேர்த்து மாவை முதலில் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- பின் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவை நன்றாக சப்பாத்தி பதத்திற்கு கெட்டியாக பிசையவும்.
- கடைசியாக இரண்டு ஸ்பூன் கடலை எண்ணெய் சேர்த்து மீண்டும் நன்கு பிசைந்து ஒரு ஒரு மணி நேரம் மூடி வைக்க வேண்டும்.
- ஒரு மணி நேரம் கழித்து சப்பாத்திக்கு திரட்டி சூடான கல்லில் போட்டு சிறிது கடலை எண்ணெய் சேர்த்து சுட்டு எடுத்தால் மிருதுவான சப்பாத்தி தயார்.
- தேவைப்பட்டால் கடைசியாக சிறிது நெய் தடவி பரிமாறலாம்.
தினை சப்பாத்தி
சங்க காலத்திலிருந்து நமது தமிழகத்திற்கு பரிச்சயமான ஒரு தானியம் தினை. இதனைக் கொண்டு பல பல உணவுகளை செய்து அன்றாடம் உண்ணலாம். அதேபோல் வெறும் தினையைக் கொண்டு ரொட்டியும் செய்யலாம். தினையுடன் எளிமையாக கோதுமை சேர்த்து சப்பாத்தியும் செய்ய அனைவரும் விரும்பி உண்பார்கள். இதன் மணமும், சுவையும் அபாரமாக இருக்கும். குளிர் காலத்திற்கு ஏற்ற உணவு.
பரிமாறும் அளவு : – 2