
“தேன் இருக்குது … தினை இருக்குது … தென் பழனியிலே தெருவைச் சுற்றி காவடி ஆட்டம் தினமும் நடக்குதாம்” என்பது போன்றும் தேனும் தினை மாவும் என்றும், தினைப் புனத்தில் வள்ளி காவல் காத்ததாகவும் முருகப்பெருமான் வள்ளியை அப்போது திருமணம் செய்ய விரும்பியதாகவும் என்றும் பல இடங்களில் தினையை முருகப்பெருமானுடன் ஒப்பிட்டும் சங்க கால இலக்கியங்களில் கூற பெற்றிருகிறது.
இதனில் இருத்து தினை எவ்வளவு பழமை யான என்றும் நம் தமிழர்களில் உணவு என்று தெரியவருகிறது. ஆகா பண்டைத் தமிழ் மக்களின் உணவு அரிசி இல்லை! தினை! அதுவும் குறிஞ்சி மற்றும் முல்லை நில மக்களின் உணவு.

மேலும், தினை உணவு மிகவும் சத்தானது. அது மட்டும் இல்லது அதிக ப்ரோட்டீன், நார்சத்து மற்றும் பல தாது உப்புக்கள் கொண்டுள்ளது. இரத்த கொதிப்பு மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு ஏற்றது.
இப்படிப்பட்ட தினை உணவுகள் முருகனுக்கு பிரியமானதும் உகந்ததும். இந்த கந்தசஷ்டி விழா மட்டும் கார்த்திகை மாதங்களில் தினையில் முருகனுக்கு நெய்வேதியம் செய்வது விசேசமானது. அப்படிப் பட்ட தினையில் மிளகு அடை செய்வதை இனி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- 1 கப் தினை அரிசி
- ¼ கப் உ.பருப்பு
- 1 ஸ்பூன் து. பருப்பு
- 1 ஸ்பூன் க.பருப்பு
- சிறிது தேங்காய் துருவல்
- சிறிது மிளகு
- சிறிது சீரகம்
- தேவையான அளவு பெருங்காயம்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு செக்கு கடலை எண்ணெய்
செய்முறை
தினை அரிசியை 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
பருப்புகளை 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின் அதனுடன் தேங்காய் துருவல், மிளகு, சீரகம், பெருங்காயம், உப்பு சேர்க்கவும்..
இவற்றை நன்கு அரைத்துக் கொள்ளவேண்டும்.
அரைத்த மாவை தோசை கல்லில் அடை பதத்தில் வார்த்து எண்ணை சேர்த்து முன் பக்கமும் பின் பக்கமும் லேசான தீயில் சுட்டு எடுக்கவும்.
கடலை சட்னி அல்லது வெல்லத்துடன் இதனை சேர்த்து சாப்பிடலாம்.
கார்த்திகைக்கு இந்த தினை மிளகு அடை விசேசமானது.

மிளகு அடை – கார்த்திகை தினை அடை
தேவையான பொருட்கள்
- 1 கப் தினை அரிசி
- ¼ கப் உ.பருப்பு
- 1 ஸ்பூன் து. பருப்பு
- 1 ஸ்பூன் க.பருப்பு
- சிறிது தேங்காய் துருவல்
- சிறிது மிளகு
- சிறிது சீரகம்
- தேவையான அளவு பெருங்காயம்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு செக்கு கடலை எண்ணெய்
செய்முறை
- தினை அரிசியை 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
- பருப்புகளை 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
- பின் அதனுடன் தேங்காய் துருவல், மிளகு, சீரகம், பெருங்காயம், உப்பு சேர்க்கவும்..
- இவற்றை நன்கு அரைத்துக் கொள்ளவேண்டும்.
- அரைத்த மாவை தோசை கல்லில் அடை பதத்தில் வார்த்து எண்ணை சேர்த்து முன் பக்கமும் பின் பக்கமும் லேசான தீயில் சுட்டு எடுக்கவும்.
- கடலை சட்னி அல்லது வெல்லத்துடன் இதனை சேர்த்து சாப்பிடலாம்.
- கார்த்திகைக்கு இந்த தினை மிளகு அடை விசேசமானது.