கார சாரமாக மிளகு பூண்டு குழம்பு
நான்கு மாதத்திற்குப் பின் கர்ப்பிணிகளின் நாக்கிற்கு புளிப்பு மற்றும் காரம் கொண்ட உணவுகள் விருப்பமானதாகும். அந்த மாதங்களில் நாக்கிற்கு பிடித்த தேவையான உணவுகளை செய்து சாப்பிடலாம்.
Processed மற்றும் packet உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அவற்றில் இருக்கும் பதப்படுத்திகளும் (Preservatives), இராசயங்களும், நிறமூட்டிகள், சுவையூட்டிகள் போன்றவற்றால் குழந்தையின் உள்ளுறுப்பு, மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும்.
காரணம் தெரியாத பல நோய்களுக்கு இந்த பொட்டல உணவுகளே காரணங்கள். அதாவது அடைக்கப்பட்ட உணவுகள். அளவிற்கு குறைவாக இதனை எடுத்துக்கொண்டாலும் பாதிப்பின் அளவு அதிகமாக இருக்கும்.
கர்ப்பகாலத்தில் பெண்கள் உண்ணும் அனைத்து உணவுகளும் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு அன்போடும் அக்கறையோடும் தயாரிக்கப் பட்ட வீட்டு உணவுகளாக இருக்க வேண்டும் என்பது அவசியமானது. எளிமையாக அதேசமயம் நல்ல சுவையான சத்தான இந்த குழம்பு தாய், குழந்தையின் நலனுக்கு பாதுகாப்பானது.
தேவையான பொருட்கள்
- 10 சின்ன வெங்காயம்
- 20 பல் பூண்டு
- 4 ஸ்பூன் மிளகு
- 1 ஸ்பூன் சீரகம்
- 2 ஸ்பூன் நாட்டு தனியா
- 3 தேங்காய் துருவல்
- 1 பெருங்காயம்
- தாளிக்க வெந்தயம்
- சிறிது புளி
- கறிவேப்பிலை
- உப்பு
செய்முறை
- சின்னவெங்காயம், பூண்டு இரண்டையும் தோல் உரித்து முழுதாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- மிளகு, சீரகம், நாட்டு தனியா, தேங்காய் ஆகியவற்றை தனித்தனியே எண்ணெய் இல்லாமல் வறுத்து கொள்ள வேண்டும்.
- வறுத்த பொருட்களை ஆற வைத்து மைய அரைத்து கொள்ள வேண்டும்.
- மண் சட்டியில் எண்ணெய் விட்டு வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்ததும் பூண்டு, சின்ன வெங்காயம் போட்டு வதக்க வேண்டும்.
- 5 நிமிடம் வதங்கியபின் புளிக்கரைசல், தேவையான உப்பு போட்டு அரைத்தவற்றையும் சிறிது தண்ணீருடன் நன்கு கொதிக்க விடவும்.
- கமகமக்கும் வாசனையும் மண் சட்டியின் மணமும் குழம்பில் பிரிந்து மிதக்கும் எண்ணெயும் கர்ப்பிணிகளை உடனே சுவைக்க தூண்டும்.
- கார சாரமாக கமகமக்கும் குழம்பு.. இதனுடன் கீரை, பொரியல் சேர்த்து உண்ண சிறந்தது.
- இந்த குழம்பு கர்ப்பகாலம் மட்டுமில்லாது குழந்தை பெற்றபிறகும் வயிற்றில் உள்ள புண் ஆறவும் வயிறு சுருங்கவும் அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டிய குழம்பு.