நீர்க்கோவை அல்லது தலைபாரம் பலருக்கும் அதிக தொந்தரவை அளிக்கும் நோய். அதிலும் காலையில் எழுந்ததும் வரும் தலைபாரம் நாள் முழுவதையும் நிறைவில்லாததாக மாற்றும். இதனால் சோர்வு, வீக்கம், எரிச்சல் என பல தொந்தரவும் ஏற்படும். இதனை தொடரவிடாமல் வீட்டிலேயே நமது கைவைத்திய முறையை பின்பற்ற சிறந்த பலனைப் பெறலாம்.
சுக்கு
சுக்கு தலைபாரம் / நீர்க்கோவைக்கு சிறந்த மருத்துவம், சுக்கை உரைத்து தலையில் பற்றாகவும் போடலாம் அதேப்போல் சுக்கை தோல் நீக்கி தட்டி அரை கப் நீரில் சேர்த்து பாதியாக சுண்டவைத்து அதனை காய்ச்சிய பசும்பாலில் சேர்த்து காலை மாலை பருகிவார விரைவில் மறையும்.
மஞ்சள்
மஞ்சளும் நல்ல பலனை அளிக்கும். மஞ்சளை நெருப்பில் சுட்டு அதன் புகையை சுவாசிக்க நீர்க்கோவை நீங்கும்.
நல்ல வேளை கீரை
நல்ல வேளை கீரை சமூலத்தை இடித்து அதன் சாறை பிழிந்து நீக்கிவிட்டு மீதமிருக்கும் சக்கையை மட்டும் தலையில் வைத்துக் கட்ட தலைபாரம் நீங்கும்.
ஆடாதொடை
தலைவலி, காய்ச்சல், சளி போன்ற தொந்தரவுகளுக்கு ஆடாதொடை மூலிகை சிறந்த பலனளிக்கும். ஆடாதொடை மூலிகையை மணப்பாகு செய்து வைத்துக்கொண்டு வெந்நீரில் அன்றாடம் ஐந்து மில்லி அளவு நீரில் கலந்து மூன்று வேளை பருகிவர நீர்கோவை மறையும்.
கேழ்வரகு
கேழ்வரகை மாவாக்கி அதனை நீர் சேர்த்து காய்ச்சி இளம்சூட்டில் தலையில் பற்றிட தலையில் சேர்ந்திருக்கும் நீரை அது உறிஞ்சி இழுக்கும். விரைவில் தலைபாரம் நீங்கும்.
நீர்முள்ளி வேர், வில்வ இலை சூரணமும் தலைபாரத்தை நீக்க பெருமுதவி செய்யும்.