வெந்தயக்கீரை – நம் கீரை அறிவோம்

பலவிதமான சத்துக்களும் இரும்பு சத்துக்கள் நிறைந்த கீரை வெந்தையக்கீரை. விரைவாக வளரக்கூடியது. வீட்டிலேயே எளிமையாக வளர்க்கலாம். அதிக சத்துக்கள் கொண்ட இதனை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது. நமக்கு ஏற்படக்கூடிய ருசியின்மை, பசியின்மை, அஜீரணம், கண்பார்வைக் கோளாறுகள், மாதவிடாய் தொந்தரவுகள், வாதநோய், மேகநோய், அக்கினி மந்தம், வயிற்றுக் கடுப்பு, இடுப்பு வலி, வாய் ரணம், கட்டி, மார்புச்சளி, மூச்சடைப்பு, உட்சூடு, வறட்சி, இருமல், தலை சுற்றல், மூலநோய் போன்ற பல்வேறு வகையான நோய்களுக்கும் இந்தக் கீரை சிறந்தது.

இந்தக் கீரையை பொரியல், கூட்டு, குழம்பு செய்து சாப்பிடலாம். இதனை நாள்தோறும் உணவாக உண்டு வந்தால் காச நோய் அகன்று விடும். சொறி சிரங்கு, பார்வை கோளாறு போன்றயாவும் மறைந்து விடக் கூடிய வாய்ப்பினை பெறும்.

இந்த கீரையை சுத்தம் செய்து நன்கு வேகவைத்து அதனுடன் தேவையான அளவு தேன் சேர்த்து நன்கு கடைந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கி விடும்.

இந்தக் கீரையுடன் புளி, அத்திப்பழம், திராட்சை முதலிய மூன்றையும் சேர்த்து கஷாயம் செய்து இதனோடு தேவையான அளவு தேன் கலந்து சாப்பிட்டு வர பித்தக் கிறுகிறுப்பு, தலைச்சுற்றல், உட்சூடு, வறட்சி இருமல், மூலநோய், குடல் ரணம் ஆகிய பிணிகள் நீங்கி விடும்.

வெந்தயக் கீரையை தேவையான அளவிற்கு எடுத்துக்கொண்டு அம்மியில் வைத்து அரைத்து சூடாக்கி வீக்கங்கள் வலி உள்ள இடத்தில் பூசி வந்தால் நாளடைவில் வீக்கமானது தணிந்துவிடும். மாதவிடாய் கோளாறுகள் உள்ள பெண்கள் இந்த வெந்தயக்கீரையை அதிக அளவில் உணவோடு சேர்த்து உண்டு வருவது நல்லது. இந்த கீரையை கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் அஜீரணக் குறைபாடுகள் நீங்கி ஜீரண சக்தி அதிகரிக்கும்.

(2 votes)