பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஏற்படும் தொந்தரவுகளில் முதன்மையானது மாதவிடாய் தொந்தரவுகளும் அதனால் பல பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலியும். மாதவிடாய் சமயங்களில் பெண்களுக்கு ஏற்படும் வயிற்றுவலிக்கு பல காரணங்கள் உள்ளன.
வயிற்றுவலிக்கு காரணங்கள்
- உடல் சூட்டினால் பல பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில் வயிற்றுவலி ஏற்படும்.
- கருப்பையில் தொற்றுகள் ஏற்பட்டிருந்தாலும் கிருமிகளாலும் வலி ஏற்படும்.
- வறண்டு இருந்தாலும் கருப்பை வீக்கம் அடைந்திருந்தாலும் வலி ஏற்படும்.
- அதிக காரம், வாய்வு, அதிக உஷ்ணம் ஏற்படும் உணவுகள் என பல காரணங்களாலும் வயிற்றுவலி ஏற்படும்.
இவ்வாறு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்றுவலியை தீர்க்க சில எளிய முறைகளை பின்பற்ற விரைவில் இந்த தொந்தரவிலிருந்து வெளிவரலாம்.
மாதவிடாய் வயிற்று வலி தீர
- பெண்கள் இறுக்கமான ஆடைகளை தவிர்ப்பது சிறந்தது.
- வாரம் ஒருமுறையேனும் நல்லெண்ணெய் தேய்த்து எண்ணெய்க் குளியல் செய்யவேண்டும்.
- இரவு படுக்கும் முன் அடி வயிற்றில் சிறிது விளக்கெண்ணெய் (Castor Oil) தேய்த்து படுக்க வேண்டும்.
- ஒரு கையளவு பூண்டை நெய்யில் வதக்கி மாதம் ஒருமுறை உண்ணலாம்.
- அதேப்போல் கையளவு சின்ன வெங்காயத்தை நெய்யில் சேர்த்து வதக்கி உண்ணலாம்.
- பெருங்கயத்தை மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க நல்ல பலன் கிடைக்கும்.
- முருங்கை காம்புடன் சீரகம் சேர்த்து கொதிக்கவைத்து அல்லது முருங்கை இலை சாறுடன் சீரகம் சேர்த்து அரைத்து பருக நல்ல பலன் கிடைக்கும்.
- மூன்று மிளகு, ஒரு கையளவு கீழாநெல்லி இலை சேர்த்து மைய அரைத்து காலை வெறும் வயிற்றில் உண்டு வெந்நீர் அருந்த நல்ல பலன் கிடைக்கும்.
- சிறிது வெந்தயத்தை இரவு ஊறவைத்து, காலையில் நன்கு மென்று உண்ண அடி வயிற்று வலி, மாதவிடாய் வலி விரைவில் பறந்தோடும்.
- கருப்பு உளுந்து சோறு, கருப்பு உளுந்து கஞ்சி அவ்வப்பொழுது எடுத்துக் கொள்ளவேண்டும்.
- சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வதும், காலை சூரிய உதயத்திற்கு முன் எழுவதும் விரைவில் இந்த தொந்தரவிலிருந்து வெளிவர உதவும்.
எளிதாக வீட்டிலேயே இந்த முறைகளை பின்பற்றி விரைவில் மாதவிடாய் வயிற்று வலி அதிலும் மாதாமாதம் வரும் வயிற்று வலி தீரும். சிலர் இதற்கு உடனடி தீர்வாக மருந்து மாத்திரைகளை பயன்படுத்த அது காலப்போக்கில் பெரிய பதிப்புகளையும், உடல் ரீதியான நோய்களையும் ஏற்படுத்தும்.