மூலிகைகளின் வகைகள், பிரிவுகள்

சித்தர்கள் மூலிகைகளின் எண்ணிக்கை மொத்தம் இருபது லட்சம் என குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு லட்சக்கணக்கில் இருக்கும் மூலிகைகளை நமது சித்தர்கள் வகைப்படுத்தியும் அதன் தன்மைகள், பண்புகளைக் கொண்டு பிரித்துள்ளனர். உதாரணத்திற்கு கரிசலாங்கண்ணி, தூதுவளை, முசுமுசுக்கை போன்றவை ஞான மூலிகை வகையைச் சேர்ந்ததாக பிரிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு மொத்த மூலிகைகளும் பதினெட்டு வகையாக பிரிக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு பிரிக்கப்பட்ட மூலிகைகளின் வகைகளையும் அதன் ஆங்கில வார்த்தைகளையும் பார்க்கலாம். எளிதாக மூலிகைகளின் தன்மையைப் புரிந்து கொள்ளவும் இவை பயன்படும். மேலும் சமீபத்திய ஆய்வுகளில் மூலிகைகளின் பண்புகளையும் இந்த பிரிவுகளில் வகைப்படுத்துவது எளிதாக மூலிகைகளைப் பற்றிய தெளிவை பெற உதவுகிறது.

  • கற்பமூலிகைகள் (Rejuvenating herbs)
  • ஞான மூலிகைகள் (Spiritual herbs)
  • இரசவாத மூலிகைகள் (Alchemical Herbs)
  • வசிய மூலிகைகள் (Psychic herbs)
  • மாந்திரீக மூலிகைகள் (Magic herbs)
  • வழிபாட்டு மூலிகைகள் (Religious herbs)

  • பிணி நீக்கும் மூலிகைகள் (Therapeutic herbs)
  • உடல் தேற்றி மூலிகைகள் (Tonic herbs)
  • உலோக மூலிகைகள் (Metallogenic herbs)
  • வர்ம மூலிகைகள் (Chiropractic herbs)
  • விஷ மூலிகைகள் (Toxic herbs)
  • நஞ்சை முறிக்கும் மூலிகைகள் (Antidotes)

  • எலும் பொட்டும் மூலிகைகள் (Bone setting herbs)
  • சதை ஒட்டும் மூலிகைகள் (Muscle toners)
  • பச்சை குத்தும் மூலிகைகள் (Tattooing Herbs)
  • காதணி ஒம்பி மூலிகைகள் (Earboring Herbs) 
  • பல் பிடுங்கும் பச்சிலைகள் (Herbs for Dental extraction)
  • கருச்சிதைவு மூலிகைகள் (Abortifacient Herbs)
(1 vote)