மசாஜ்

பல நூற்றாண்டுகளாக நமது மண்ணில் செழித்திருக்கும் உன்னதமான சிகிச்சை முறை மசாஜ் சிகிச்சை முறை. சமீப காலத்தில் சில மசாஜ் மையங்களினால் மசாஜையும் கொச்சைப்படுத்தி தீய நோக்கதிற்காக பயன்படுத்துவதால் மசாஜ் என்ற சொல்லே தற்பொழுது தப்பாகப் பார்க்கப்படுகிறது. பல நோய்களுக்கு சிறந்த மற்றும் எளிமையான சிகிச்சை முறையும் இந்த மசாஜ் சிகிச்சை முறை.

மசாஜ் என்றால் என்ன?

மசாஜ் என்பது உடலை திறம்பட அழுத்துதல்,பிசைதல், உருட்டுதல், தேய்த்தல், தட்டுதல் போன்ற செயல்களால் நிகழ்வது. மருந்து மாத்திரைகளால் நிகழ்த்த முடியாத சிகிச்சையைக் கூட மசாஜின் மூலம் திறம்பட நிகழ்த்தலாம்.

பொதுவாக மசாஜ் யாருக்காக என்றால் யாருக்கு உடம்பில் தங்களுடைய சக்தியைத் தனது உடல் செயல்பாடுகளால் பெற முடியாததோ அவர்களுக்கு தேவை.

உடலில் ஏற்படும் நோயை குணப்படுத்த சிறந்த அதிர்வுகள் அவசியம். முறையான மசாஜ் செய்பவர்கள் சரியான அதிர்வுகளுக்கு உடலை வசப்படுத்துவர்கள்.

மூட்டு, நரம்பு, தசை சம்மந்தமான பல நோய்களுக்கும், மலச்சிக்கலுக்கும் மசாஜ் மருத்துவம் சிறந்த பலனை அளிக்கும்.

மசாஜ் செய்யும் பொழுது

  • இரத்த ஓட்டம் பெருகி, பிராணவாயு திசுக்களுக்கும், செல்களுக்கும் பரவி உற்சாகத்தையும், புத்துணர்வையும் ஏற்படுத்துகிறது.
  • உடலில் இரண்டு முதல் மூன்று டிகிரி வரை வெப்பம் மிகுந்து நுரையீரல் சுவாசம் அதிகரிக்கிறது. நிணநீர் தேவையான அளவு சுரக்கிறது. இதனால் ஹார்மோன் சார்ந்த நோய்கள்,தொந்தரவுகளில் இருந்து விடுபடலாம்.
  • அவ்விடங்களில் வலி, சோர்வு, விறைப்பு இவற்றிற்கு காரணமான தசைகளில் தங்கியுள்ள கழிவுப் பொருட்கள் நீங்குகின்றன.
  • நரம்பு மண்டலம் புத்துணர்ச்சி பெறுகிறது. பரபரப்பு. விறைப்பு, கவலை இவை நீங்கி, நல்ல உறக்கம் ஏற்படுகிறது.
  • மசாஜ் செய்யப்படாததை விட மசாஜ் செய்யப்பட்ட உடல் உறுப்புகளில் இளமைச் செழிப்பைக் காணலாம்.
  • தூய காற்றோட்டமான இடத்தில் மசாஜ் செய்வதும் சரிவிகித உணவு உண்பதும் விரைவில் பலன் கிட்ட அவசியமாகும்.

மசாஜ் என்பது சோர்ந்தோருக்கு ஒரு செயற்கை உடற்பயிற்சி. இயற்கையாகச் செய்யப்படும் உடற்பயிற்சி போல் தசை பெருக்க அல்லது ஊளைச் சதையைக் குறைக்க மசாஜ் உதவாது.

(2 votes)