மசாலா மோர்

கோடைக்கு ஏற்ற இதமான பானம் இந்த மசாலா மோர். முன்பகல் வேளையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரும் பருக உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும். உடல் உஷ்ணம் குறையும். சின்ன வெங்காயம் சேர்ப்பதால் உடல் நலனுக்கு ஏற்றது.

மோர் ஜீரண உறுப்புகளில் வரும் தொந்தரவுகளுக்கு சிறந்தது. வயிற்றில், குடலில் வரும் தொந்தரவுகளை நீக்கக் கூடியது. குடலுக்கு தேவையான நல்ல நுண்ணுயிர்களை பெருக்கக் கூடியது. அன்றாடம் தயிர், மோர் ஆகியவற்றை எடுத்துக் கொள்வது சிறந்த பலனை அளிக்கும் அதிலும் குறிப்பாக கோடை காலத்தில் அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தேவையான பொருட்கள்

  • 1 கப் தயிர்
  • ½ கப் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்
  • 1 ஸ்பூன் சீரகம்
  • சிறிது கொத்தமல்லி
  • சிறிது கறிவேப்பிலை

  • 5 கப் தண்ணீர்
  • சிறு துண்டு இஞ்சி
  • 1 சிட்டிகை பெருங்காயத்தூள்
  • உப்பு

செய்முறை

  • முதலில் வெண்ணை நீக்கிய தயிரை நன்றாகக் கடைந்து உப்பு, தண்ணீர் சேர்த்து மோராக்கவும்.
  • அதனுடன் பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்க்கவும். காரத்திற்கு பச்சைமிளகாயை சேர்க்காமல் சின்ன வெங்காயம் சேர்ப்பது சிறந்த பலனை வயிற்ருக்கும், குடலுக்கும் அளிக்கும்.

  • சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து, மோரில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

மசாலா மோர்



கோடைக்கு ஏற்ற இதமான பானம். முன்பகல் வேளையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரும் பருக உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும். உடல் உஷ்ணம் குறையும்.


⏲️ ஆயத்த நேரம்
10 mins

⏲️ சமைக்கும் நேரம்
1 mins

🍴 பரிமாறும் அளவு
5

🍲 உணவு
பானம்


தேவையான பொருட்கள்
  • 1 கப் தயிர்
  • ½ கப் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்
  • 1 ஸ்பூன் சீரகம்
  • சிறிது கொத்தமல்லி
  • சிறிது கறிவேப்பிலை
  • 5 கப் தண்ணீர்
  • சிறு துண்டு இஞ்சி
  • 1 சிட்டிகை பெருங்காயத்தூள்
  • உப்பு
செய்முறை
  1. முதலில் வெண்ணை நீக்கிய தயிரை நன்றாகக் கடைந்து உப்பு, தண்ணீர் சேர்த்து மோராக்கவும்.
  2. அதனுடன் பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்க்கவும். காரத்திற்கு பச்சைமிளகாயை சேர்க்காமல் சின்ன வெங்காயம் சேர்ப்பது சிறந்த பலனை வயிற்ருக்கும், குடலுக்கும் அளிக்கும்.
  3. சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து, மோரில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.