மருத மரம் / மருது – நம் மூலிகை அறிவோம்

Terminalia Arjuna; மருத மரம் / மருது

மருத மரம் பல மருத்துவ பயன்களும் நன்மைகளும் கொண்ட ஒரு அற்புதமான மரம். தமிழகத்திலிருக்கும் பல கோவில்களிலும் ஸ்தல விருட்சமான இருக்கும் சிறப்பு வாய்ந்த மரம் மருது. வெள்ளை மருதமரம், அருச்சுனம், சுரபம், பூதலம், பூலத்தி, இந்திரன்பார் என பல பெயர்களை இந்த மருதமரம் கொண்டுள்ளது.

இது ஒரு மர வகையைச் சேர்ந்தது. இதன் இலைகள் தனி இலை அமைப்பைக் கொண்டுள்ளது. இது காம்பற்ற மலர்களையும் ஒருபால் மலர்களையும் கொண்டவை. ஒரே ஒரு விதையுடன் பலகோணங்களை உடைய ட்ரூப் வகைகனிகளைக் கொண்டு இந்த மரம் காணப் படும்.

சுவர்ப்பு சுவை கொண்ட இந்த மரத்தின் இலை, பழம், வித்து, பட்டை ஆகியவை பயன்படும் பகுதிகளாகவும், மருத்தவ பயனுடனும் உள்ளது. அதிலும் மருதம்பட்டை எனப்படும் இந்த மரத்தின் பட்டையில் பல மருத்துவகுணங்களும் உடலுக்கு மருந்தாக பயனளிக்கும் அமிலங்களும் அதிகமுள்ளது.

மருத மரத்தில் வெண்மை, செம்மை என இரு வகையுண்டு. இரண்டின் தன்மைகளும் பண்புகளும் ஒன்றே தான். உடலுக்கு வலுவையும், நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அளிக்கும் தன்மை கொண்டது.

நீர் வேட்கை, நீரிழிவு, வெள்ளை, மயக்கம், கிருமி தொந்தரவு, வயிற்று கோளாறுகள், பெருநோய் போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்தாக உள்ளது.

புண்களுக்கு

மருதம் பழத்தை எடுத்து நன்றாக அவித்து நன்கு பிசைந்து புண்களின் மீது வைத்துக் கட்டிவர கொடிய புண்களெல்லாம் விரைவாக குணமாகும். அதேப்போல் மருத மரத்தின் பட்டையை ஒன்றிரண்டாக இடித்து 2 கப் நீர் விட்டு 1 கப்பாக சிறுதீயில் சுண்ட காய்ச்சி அந்த நீரைக் கொண்டு புண்களைக் கழுவி வர புண்கள் விரைவில் உலரும்.

பித்த வெடிப்பிற்கு

ஓரிரு இலையை ஒரு கப் பாலில் அரைத்து கலக்கி, தினம் இரண்டு வேளை என மூன்று நாட்கள் பத்திய உணவுடன் சாப்பிட்டுவர பித்த வெடிப்பு நீங்கும்.

தலைவலி தீர

மருதம் பட்டையைப் பொடி செய்து மூக்கிலிட தலைவலி குணமாகும்.

மருதம் பட்டை கசாயம்

மருதம்பட்டை, அரசம்பட்டை, வில்வப்பட்டை போன்ற மருத்துவகுணம் கொண்ட மரப் பட்டைகளுடன் சில மூலிகைகளையும் சேர்த்து கசாயம் செய்து பருக பல நோய்கள் தீரும்.

(13 votes)