மருந்து குழம்பு

பொதுவாக நம் முன்னோர் அனைவரும் இந்த மருந்து குழம்பை தவறாமல் மாதம் இரண்டு முறை உண்டனர். காலப்போக்கில் இந்தப் பழக்கம் குறைந்து இன்று குழந்தைப் பெற்ற தாய்மார்கள் உண்ணும் குழம்பு என மாறிவிட்டது. இந்த நிலையை மாற்றி அனைவரும் இந்த மருந்து குழம்பை மாதம் இருமுறை உட்கொள்ள உடலில் ஏற்படும் பல நோய்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும். For Marunthu Kuzhambu Recipe in English.

மருந்து குழம்பு உண்பதால் ஏற்படும் நன்மைகள்

  • உடல் உறுப்புகளை சீர் செய்யும்.
  • உடல் சோர்வை நீக்கும்.
  • உடல் கழிவுகளை நீக்கும்.

மருந்து குழம்பை யாரெல்லாம் உண்ணலாம்

அனைவருக்கும் உகந்தது. மாதம் இரண்டு முறை மதிய உணவுடன் சுடு சாதத்தில் சேர்த்து இதனை உண்பதால் உடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் நோய்கள் அகலும், உடல் புத்துணர்வு அடையும்.

தேவையான பொருட்கள்

  • ½ ஸ்பூன் திப்பிலி
  • ½ ஸ்பூன் கருஞ்சீரகம்
  • ½ ஸ்பூன் சித்தரத்தை
  • 2 ஸ்பூன் மிளகு
  • 10 பல் பூண்டு
  • சிறிது மஞ்சள் தூள்
  • ஒரு விரல் நீளம் சுக்கு
  • சிறிது புளி

  • 2 ½ ஸ்பூன் மல்லித் தூள்
  • தேவையான அளவு உப்பு
  • 1 ஸ்பூன் நல்லெண்ணெய்
  • ½ ஸ்பூன் கடுகு
  • ½ ஸ்பூன் சீரகம்
  • சிறிது கருவேப்பிலை

செய்முறை

  • முதலில் புளியை வெறும் சட்டியில் போட்டு சுட்டு கொள்ள வேண்டும்.
  • பூண்டை தோல் உரித்துக் கொள்ள வேண்டும்.
  • சுக்கை தட்டி வைத்துக் கொள்ளவும்.
  • மற்ற மருந்து சரக்குகளை நல்லெண்ணெய் விட்டு வதக்கவும்.

  • அனைத்தையும் அரைத்துக் கொள்ளவும்.
  • சுட்ட புளியை கரைத்து அதனுடன் அரைத்தவற்றையும் கரைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு மண் சட்டியை அடுப்பிலேற்றி அதனில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து கரைத்தவற்றை சேர்த்து தேவையான அளவு மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து கொதிக்கவிடவும்.

  • குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்கவிட்டால் மருந்து குழம்பு தயார்.
  • முடக்கத்தான் இலைகளை பறித்து அரைத்து சேர்த்து செய்வது முடக்கத்தான் மருந்து குழம்பு. மற்ற மூலிகைகளையும் சேர்த்து செய்யலாம்.

மருந்து குழம்பு

(1 vote)



அனைவரும் மாதம் இரண்டு முறை உண்ண வேண்டிய குழம்பு. உடல் உறுப்புகளை சீர் செய்யும். உடல் சோர்வை நீக்கும். உடல் கழிவுகளை நீக்கும். பொதுவாக நம் முன்னோர் இந்த மருந்து குழம்பை தவறாமல் உண்டனர். காலப்போக்கில் இந்தப் பழக்கம் குறைந்து இன்று குழந்தைப் பெற்ற தாய்மார்கள் உண்ணும் குழம்பு என மாறிவிட்டது. இந்த நிலையை மாற்றி அனைவரும் இந்த மருந்து குழம்பை மாதம் இருமுறை உட்கொள்ள உடலில் ஏற்படும் பல நோய்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.


⏲️ ஆயத்த நேரம்
15 mins

⏲️ சமைக்கும் நேரம்
15 mins

🍴 பரிமாறும் அளவு
4

🍲 உணவு
குழம்பு


தேவையான பொருட்கள்
  • ½ ஸ்பூன் திப்பிலி
  • ½ ஸ்பூன் கருஞ்சீரகம்
  • ½ ஸ்பூன் சித்தரத்தை
  • 2 ஸ்பூன் மிளகு
  • 10 பல் பூண்டு
  • ஒரு விரல் நீளம் சுக்கு
  • சிறிது புளி
  • 2 ½ மல்லித் தூள்
  • தேவையான அளவு உப்பு
  • 1 ஸ்பூன் நல்லெண்ணெய்
  • ½ ஸ்பூன் கடுகு
  • ½ ஸ்பூன் சீரகம்
  • சிறிது கருவேப்பிலை
செய்முறை
  1. முதலில் புளியை வெறும் சட்டியில் போட்டு சுட்டு கொள்ள வேண்டும்.
  2. பூண்டை தோல் உரித்துக் கொள்ள வேண்டும்.
  3. சுக்கை தட்டி வைத்துக் கொள்ளவும்.
  4. மற்ற மருந்து சரக்குகளை நல்லெண்ணெய் விட்டு வதக்கவும்.
  5. அனைத்தையும் அரைத்துக் கொள்ளவும்.
  6. சுட்ட புளியை கரைத்து அதனுடன் அரைத்தவற்றையும் கரைத்துக் கொள்ள வேண்டும்.
  7. ஒரு மண் சட்டியை அடுப்பிலேற்றி அடனில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து கரைத்தவற்றை சேர்த்து தேவையான அளவு மல்லித்தூள், உப்பு சேர்த்து கலந்து கொதிக்கவிடவும்.
  8. குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்கவிட்டால் மருந்து குழம்பு தயார்.
  9. முடக்கத்தான் இலைகளை பறித்து அரைத்து சேர்த்து செய்வது முடக்கத்தான் மருந்து குழம்பு. மற்ற மூலிகைகளையும் சேர்த்து செய்யலாம்.

(1 vote)