மாப்பிள்ளை சம்பா உப்புமா

குறைந்த GI(glycemic index) கொண்டுள்ள இந்த மாப்பிள்ளை சம்பா அரிசியில் அரிசியில் புரதம், வைட்டமின், தாது உப்புக்கள், நார் சத்துக்கள், கொழுப்பு சத்துக்கள் உள்ளது.

பல சத்துக்களைக் கொண்டிருக்கும் இந்த மாப்பிள்ளை சம்பா அரிசி அதிக வைட்டமின் பி சத்துக்களைக் கொண்டிருக்கிறது. புது மாப்பிள்ளைகள் மட்டுமில்லாது சர்க்கரை வியாதி உள்ளவர்களும் தொடர்ந்து இந்த மாப்பிள்ளை சம்பா அரிசி உணவு உண்டு வர சர்க்கரை அளவின் கட்டுப்பாட்டையும் கண்கூடாகக் காணலாம். நரம்பு தளர்ச்சி உள்ளார்கள் இந்த அரிசியினை களைந்த நீரினை அருந்தலாம். நரம்பு தளர்வு படிப்படியாக பலப்படும்.

மேலும் மாப்பிள்ளை சம்பா அரிசியைப் பற்றி தெரிந்துகொள்ள – இங்கு இணையவும்.

மாப்பிள்ளை சம்பா அரிசியின் பயன்கள் நன்மைகள் – இங்கு இணையவும்.

தேவையான பொருட்கள்

  • 1 கப் மாப்பிள்ளை சம்பா அரிசி
  • ¼ கப் துவரம் பருப்பு
  • 2 ஸ்பூன் மிளகு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 2 ஸ்பூன் தேங்காய்த் துருவல்
  • தேவையான அளவு உப்பு
  • 1 ஸ்பூன் செக்கு தேங்காய் எண்ணெய்
  • 1 வெங்காயம்
  • ½ கப் பீன்ஸ், காரட்

தாளிக்க

  •  தேங்காய் எண்ணெய்
  • கடுகு
  • காய்ந்த மிளகாய்
  • உளுத்தம் பருப்பு
  • கடலைப் பருப்பு
  • பெருங்காயம்
  • கறிவேப்பிலை

செய்முறை

மாப்பிள்ளை சம்பா அரிசி மற்றும் துவரம் பருப்பை மிக்ஸியில் ரவை போல் உடைத்துக் கொள்ளவும்.

மிளகை ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.

மண்சட்டியில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, ஒரு காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், உடைத்த மிளகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.

வெங்காயம் சேர்த்து வதக்கி அதனுடன் பொடியாக நறுக்கிய காரட் பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.

பின் 2 1/2 கப் தண்ணீருடன் உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.

தண்ணீர் கொதிக்கும்போது தீயைக் குறைத்து, அரைத்து வைத்திருக்கும் கைவரச் சம்பா ரவையை  சேர்த்துக் கிளறி மூடிவிடவும்.

10 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்திருந்து அவ்வப்போது கிளறிவிடவும். 

அடுப்பை அணைத்ததும், தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலந்து பரிமாற சுவையான மாப்பிள்ளை சம்பா அரிசி உப்புமா தயார்.

இந்த உப்புமா அனைத்து வயதினருக்கும் ஏற்றது. சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும், உடல் பருமனாக உள்ளவர்களுக்கும் ஏற்ற மாப்பிள்ளை சம்பா உப்புமாவாக உள்ளது. 

5 from 1 vote

மாப்பிள்ளை சம்பா உப்புமா

குறைந்த GI(glycemic index) கொண்டுள்ள இந்த மாப்பிள்ளை சம்பா அரிசியில் அரிசியில் புரதம், வைட்டமின், தாது உப்புக்கள், நார் சத்துக்கள், கொழுப்பு சத்துக்கள் உள்ளது.
பல சத்துக்களைக் கொண்டிருக்கும் இந்த அரிசி அதிக வைட்டமின் பி சத்துக்களைக் கொண்டிருக்கிறது. புது மாப்பிள்ளைகள் மட்டுமில்லாது சர்க்கரை வியாதி உள்ளவர்களும் தொடர்ந்து இந்த அரிசி உணவு உண்டு வர சர்க்கரை அளவின் கட்டுப்பாட்டையும் கண்கூடாகக் காணலாம். நரம்பு தளர்ச்சி உள்ளார்கள் இந்த அரிசியினை களைந்த நீரினை அருந்தலாம். நரம்பு தளர்வு படிப்படியாக பலப்படும்.
ஆயத்த நேரம் : – 10 minutes
சமைக்கும் நேரம் : – 30 minutes
மொத்த நேரம் : – 40 minutes

தேவையான பொருட்கள்

  • 1 கப் மாப்பிள்ளை சம்பா அரிசி
  • ¼ கப் துவரம் பருப்பு
  • 2 ஸ்பூன் மிளகு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 2 ஸ்பூன் தேங்காய்த் துருவல்
  • தேவையான அளவு உப்பு
  • 1 ஸ்பூன் செக்கு தேங்காய் எண்ணெய்
  • 1 வெங்காயம்
  • ½ கப் பீன்ஸ், காரட்

தாளிக்க

  •  தேங்காய் எண்ணெய்
  • கடுகு
  • காய்ந்த மிளகாய்
  • உளுத்தம் பருப்பு
  • கடலைப் பருப்பு
  • பெருங்காயம்
  • கறிவேப்பிலை

செய்முறை

  • மாப்பிள்ளை சம்பா அரிசி மற்றும் துவரம் பருப்பை மிக்ஸியில் ரவை போல் உடைத்துக் கொள்ளவும்.
  • மிளகை ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.
  • மண்சட்டியில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, ஒரு காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், உடைத்த மிளகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • வெங்காயம் சேர்த்து வதக்கி அதனுடன் பொடியாக நறுக்கிய காரட் பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.
  • பின் 2 1/2 கப் தண்ணீருடன் உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
  • தண்ணீர் கொதிக்கும்போது தீயைக் குறைத்து, அரைத்து வைத்திருக்கும் கைவரச் சம்பா ரவையை  சேர்த்துக் கிளறி மூடிவிடவும்.
  • 10 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்திருந்து அவ்வப்போது கிளறிவிடவும். 
  • அடுப்பை அணைத்ததும், தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலந்து பரிமாற சுவையான மாப்பிள்ளை சம்பா அரிசி உப்புமா தயார்.
  • இந்த உப்புமா அனைத்து வயதினருக்கும் ஏற்றது. சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும், உடல் பருமனாக உள்ளவர்களுக்கும் ஏற்ற மாப்பிள்ளை சம்பா உப்புமாவாக உள்ளது. 
(2 votes)

1 thought on “மாப்பிள்ளை சம்பா உப்புமா

Comments are closed.