Mappillai Samba Rice Recipes in Tamil

மாப்பிள்ளை சம்பா அரிசி சமைப்பது எப்படி

குழந்தைபேறு பெற சிறந்த அரிசி இந்த மாப்பிள்ளை சம்பா அரிசி. உடல் பருமன், இருதய நோய், நீரிழிவு, மலட்டுத்தன்மை என அடுக்கிக் கொண்டே போகும் இன்றைய நாகரீக தொந்தரவுகளுக்கு நல்ல ஒரு சத்தான அரிசி இந்த மாப்பிள்ளை சம்பா அரிசி. மேலும் மாப்பிள்ளை சம்பா அரிசியின் பயன்கள், நன்மைகளையும் வேறொரு பதிவில் தெரிந்துக் கொள்ளலாம். இங்கு மாப்பிள்ளை சம்பா அரிசியில் தயாரிக்கக் கூடிய உணவுகளைப் பார்ப்போம்.

மாப்பிள்ளை சம்பா அரிசி சாதம்

மாப்பிள்ளை சம்பா அரிசி சாதம் செய்ய எளிமையான சல முறைகளும் உள்ளது. சற்று மோட்ட ரகம் இந்த பாரம்பரிய சிகப்பரிசி அதனால் இதனை ஊறவைத்து சமைப்பது சிறந்தது.

மாப்பிள்ளை சம்பா அரிசி இட்லி

மாப்பிள்ளை சம்பா இட்லி

மாப்பிள்ளை சம்பா இட்லி – குறைந்த GI(glycemic index) கொண்டுள்ள இந்த மாப்பிள்ளை சம்பா அரிசியில் அரிசியில் புரதம், வைட்டமின், தாது உப்புக்கள், நார் சத்துக்கள், கொழுப்பு சத்துக்கள் உள்ளது.
செய்முறை ➤

மாப்பிள்ளை சம்பா அரிசி முளைதானிய அடை

மாப்பிள்ளை சம்பா முளைதானிய அடை

அனைத்து சத்துக்களும் நிறைந்த அற்புதமான அடை. எளிதில் ஜீரணிக்கக்கூடிய, வயிறு குடலுக்கு ஆற்றலை அளிக்கும் சிறந்த உணவு. புரதம், வைட்டமின், தாது சத்துக்கள் நிறைந்த உணவாகவும் இருக்கும் உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற காலை, மாலை உணவு.
செய்முறை ➤

மாப்பிள்ளை சம்பா அரிசி நீராகாரம்

மாப்பிள்ளை சம்பா நீராகாரம்

வைட்டமின் B6, B12 போன்றவை இந்த பழைய சாதத்தில் அதிகம் உருவாகிறது. புரதம் மற்றும் மாவுச் சத்து எளிதில் செரிக்கப்படும் தன்மை பெறுகிறது.
palaya satham, neeragaram, fermented rice benefits and uses, traditional rice neeragaram, maapillai samba neeragaram

மாப்பிள்ளை சம்பா அரிசி தயிர் சாதம்

மாப்பிள்ளை சம்பா தயிர் சாதம்

சத்துக்களும் சுவையும் நிறைந்த அற்புத உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள்.

மாப்பிள்ளை சம்பா அரிசி உப்புமா

மாப்பிள்ளை சம்பா உப்புமா

குறைந்த GI(glycemic index) கொண்டுள்ள இந்த மாப்பிள்ளை சம்பா அரிசியில் அரிசியில் புரதம், வைட்டமின், தாது உப்புக்கள், நார் சத்துக்கள், கொழுப்பு சத்துக்கள் உள்ளது.
பல சத்துக்களைக் கொண்டிருக்கும் இந்த அரிசி அதிக வைட்டமின் பி சத்துக்களைக் கொண்டிருக்கிறது. புது மாப்பிள்ளைகள் மட்டுமில்லாது சர்க்கரை வியாதி உள்ளவர்களும் தொடர்ந்து இந்த அரிசி உணவு உண்டு வர சர்க்கரை அளவின் கட்டுப்பாட்டையும் கண்கூடாகக் காணலாம். நரம்பு தளர்ச்சி உள்ளார்கள் இந்த அரிசியினை களைந்த நீரினை அருந்தலாம். நரம்பு தளர்வு படிப்படியாக பலப்படும்.
செய்முறை ➤

மாப்பிள்ளை சம்பா அவல் பொங்கல்

மாப்பிள்ளை சம்பா அவல் பொங்கல்

எளிதாக ஜீரணிக்ககூடிய சிறந்த உணவு அவல். பக்குவமாக தயாரிக்கப்பட்ட சிகப்பரிசி மாப்பிள்ளை சம்பா அவலினைக் கொண்டு ஏதேனும் ஒரு உணவை அவ்வப்பொழுது தயாரித்து உண்ண உடல் பலம் கூடும், சத்து குறைபாடு அகலும்.
செய்முறை ➤

மாப்பிளை சம்பா அரிசி தேங்காய் சாதம்

மாப்பிள்ளை சம்பா தேங்காய் சாதம்

சிகப்பு நிற மாப்பிள்ளை சம்பா அரிசி சற்று மோட்டாவானா அரிசி என்றாலும் சுவையான அரிசி. சத்துக்களில் மற்ற உணவுடன் ஒப்பிட ஈடு இணையற்ற சத்துக்களைக் கொண்ட சுவையான அரிசி.திருமணத்திற்கு தயாராக இருக்கும் ஆண்கள், பெண்களுக்கு ஏற்ற அரிசி. குழந்தையின்மையை போக்கும் அற்புதமான அரிசி.
செய்முறை ➤

ஹெல்த்தி லட்டு / Healthy Laddu

ஹெல்த்தி லட்டு / Healthy Laddu

வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற சுவையான சத்தான லட்டு. சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு அதனுடன் மாப்பிள்ளை சம்பா அரிசி, கவுணி அரிசி சேர்த்து தயாரித்த சுவையான லட்டு. மாலை சிற்றுண்டியாகவும், வேலைக்கு செல்பவர்களுக்கு எடுத்துச் செல்ல ஏதுவாகவும் இருக்கும் சத்தான லட்டு.
செய்முறை ➤

சிகப்பரிசி புட்டு

சிகப்பரிசி புட்டு

குழந்தையின்மை, உடல் பருமன், நீரிழிவு என பல பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக இருக்கக் கூடியது பாரம்பரிய சிகப்பரிசிகள். அதிலும் மாப்பிள்ளை சம்பா அரிசி பல உடலுக்கு தேவையான அமினோ அமிலங்களையும், வைட்டமின், தாது சத்துக்களையும் கொண்டுள்ளது.
குழந்தைகளுக்கும் ஏற்றது. குழந்தைகள் விரும்பி உண்பார்கள். மாலை நேரத்திற்கு ஏற்ற ஒரு உணவாகும்.
செய்முறை ➤
(1 vote)