மாப்பிள்ளை சம்பா முளைதானிய அடை

அனைத்து சத்துக்களும் நிறைந்த அற்புதமான அடை. எளிதில் ஜீரணிக்கக்கூடிய, வயிறு குடலுக்கு ஆற்றலை அளிக்கும் சிறந்த உணவு. புரதம், வைட்டமின், தாது சத்துக்கள் நிறைந்த உணவாகவும் இருக்கும் உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற காலை, மாலை உணவு.

மேலும் மாப்பிள்ளை சம்பா அரிசியின் பயன்கள், நன்மைகள், சிறப்புகளை தெரிந்து கொள்ள – மாப்பிள்ளை சம்பா அரிசி.

தேவையான பொருட்கள்

  • ¼ கப் மாப்பிள்ளை சம்பா அரிசி
  • ¼ கப் முளைகட்டிய பாசிப்பயறு
  • ¼ கப் முளைகட்டிய கம்பு
  • 2 ஸ்பூன் முளைகட்டிய கருப்பு கொண்டைக்கடலை
  • 2 ஸ்பூன் முளைகட்டிய கொள்ளு
  • 2 ஸ்பூன் முளைகட்டிய கேழ்வரகு
  • சிறுதுண்டு இஞ்சி
  • 3 பல் பூண்டு
  • 1 ஸ்பூன் மிளகு
  • 1 ஸ்பூன் சீரகம்

  • 1 ஸ்பூன் சோம்பு
  • 1 வெங்காயம்
  •  சிறிது கொத்தமல்லி
  •  சிறிது கருவேப்பிலை
  •  சிறிது முருங்கை இலை
  •  சிறிது பெருங்காயம்
  • உப்பு
  • நல்லெண்ணெய்

செய்முறை

  • மாப்பிள்ளை சம்பா அரிசியினை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். 
  • மற்ற பயறுகளை 8 மணிநேரம் ஊற வைத்து பின் அவற்றை ஒரு துணியில் சுற்றி முளைகட்டிக் கொள்ளவும். 

  • மாப்பிள்ளை சம்பா அரிசி, முளைகட்டிய பாசிப்பயறு, முளைகட்டிய கம்பு, முளைகட்டிய கருப்பு கொண்டைக்கடலை, முளைகட்டிய கொள்ளு, முளைகட்டிய கேழ்வரகு, இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், சோம்பு, உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து அதில் சிறிதாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை மற்றும் முருங்கை இலையை சேர்த்து அடை போல் சுட்டு எடுக்கவும். 
  • சத்தான மாப்பிள்ளை சம்பா முளைதானிய அடையில் அனைத்து சத்துக்களும் உள்ளது.

மாப்பிள்ளை சம்பா முளைதானிய அடை

அனைத்து சத்துக்களும் நிறைந்த அற்புதமான அடை. எளிதில் ஜீரணிக்கக்கூடிய, வயிறு குடலுக்கு ஆற்றலை அளிக்கும் சிறந்த உணவு. புரதம், வைட்டமின், தாது சத்துக்கள் நிறைந்த உணவாகவும் இருக்கும் உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற காலை, மாலை உணவு.
ஆயத்த நேரம் : – 8 hours
சமைக்கும் நேரம் : – 10 minutes
மொத்த நேரம் : – 8 hours 10 minutes
பரிமாறும் அளவு : – 4

தேவையான பொருட்கள்

  • ¼ கப் மாப்பிள்ளை சம்பா அரிசி
  • ¼ கப் முளைகட்டிய பாசிப்பயறு
  • ¼ கப் முளைகட்டிய கம்பு
  • 2 ஸ்பூன் முளைகட்டிய கருப்பு கொண்டைக்கடலை
  • 2 ஸ்பூன் முளைகட்டிய கொள்ளு
  • 2 ஸ்பூன் முளைகட்டிய கேழ்வரகு
  • சிறுதுண்டு இஞ்சி
  • 3 பல் பூண்டு
  • 1 ஸ்பூன் மிளகு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 1 வெங்காயம்
  •  சிறிது கொத்தமல்லி
  •  சிறிது கருவேப்பிலை
  •  சிறிது முருங்கையிலை
  •  சிறிது பெருங்காயம்
  • உப்பு
  • நல்லெண்ணெய்

செய்முறை

  • மாப்பிள்ளை சம்பா அரிசியினை ஒரு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். 
  • மற்ற பயறுகளை 8 மணிநேரம் ஊறவைத்து பின் அவற்றை ஒரு துணியில் சுற்றி முளைகட்டிக்கொள்ளவும். 
  • மாப்பிள்ளை சம்பா அரிசி, முளைகட்டிய பாசிப்பயறு, முளைகட்டிய கம்பு, முளைகட்டிய கருப்பு கொண்டைக்கடலை, முளைகட்டிய கொள்ளு, முளைகட்டிய கேழ்வரகு, இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், சோம்பு, உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து அதில் சிறிதாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை மற்றும் முருங்கையிலையை சேர்த்து அடைபோல் சுற்று எடுக்கவும். 
  • சத்தான மாப்பிள்ளை சம்பா முளைதானிய அடையில் அனைத்து சத்துக்களும் உள்ளது.

தானியங்களை எவ்வாறு முளைக்கட்டுவது

https://www.youtube.com/watch?v=70h97rL5log