மாப்பிள்ளை சம்பா தேங்காய் சாதம்

சிகப்பு நிற மாப்பிள்ளை சம்பா அரிசி சற்று மோட்டாவானா அரிசி என்றாலும் சுவையான அரிசி. சத்துக்களில் மற்ற உணவுடன் ஒப்பிட ஈடு இணையற்ற சத்துக்களைக் கொண்ட சுவையான அரிசி. திருமணத்திற்கு தயாராக இருக்கும் ஆண்கள், பெண்களுக்கு ஏற்ற அரிசி. குழந்தையின்மையை போக்கும் அற்புதமான அரிசி.

மேலும் மாப்பிள்ளை சம்பா அரிசியினைப் பற்றிய பல தகவல்கள், மருத்துவகுணங்களை தெரிந்துக்கொள்ள் – மாப்பிள்ளை சம்பா அரிசி / Mappillai Samba Rice.

தேவையான பொருட்கள்

  • 1 கப் மாப்பிள்ளை சம்பா அரிசி
  • ½ கப் தேங்காய் துருவல்
  • உப்பு 
  • 4 வர மிளகாய்
  • 2 ஸ்பூன் நெய்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் உளுந்து
  • 15 முந்திரிபருப்பு
  • 10 நிலக்கடலை
  • கறிவேப்பிலை

செய்முறை

  • மாப்பிள்ளை சம்பா அரிசியினை ஆறு மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
  • பின் ஒரு கப் அரிசிக்கு ஐந்து கப் தண்ணீர் சேர்த்து சிறுதீயில் 30-40 நிமிடம் வேகவிடவும். 
  • மாப்பிள்ளை சம்பா அரிசி சமைக்கும் முறையை இந்த இணைப்பில் தெரிந்துக்கொள்ளலாம்.
  • மண்பானையில் வேகவைக்க எளிதாகவும், சுவையானதாகவும் அரிசி வேகும்.
  • நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்து மூடிவைக்கவும், மீதமிருக்கும் தண்ணீரை வடிக்கவேண்டாம். (நிறைக்கட்டி வேகவிடவேண்டும்)

  • வாணலியில் நெய்விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, முந்திரிபருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
  • பருப்பு வகைகள் பொன்னிறமானவுடன் தேங்காய் துருவலைச் சேர்த்து அடுப்பை அணைக்கவும். பின் லேசாக பிரட்டி விடவும்.
  • பின் தேவையான உப்புடன் வேகவைத்திருக்கும் மாப்பிள்ளை சம்பா சாதத்தினையும் சேர்த்து கிளறி பரிமாறவும்.
5 from 1 vote

மாப்பிள்ளை சம்பா தேங்காய் சாதம்

சிகப்பு நிற மாப்பிள்ளை சம்பா அரிசி சற்று மோட்டாவானா அரிசி என்றாலும் சுவையான அரிசி. சத்துக்களில் மற்ற உணவுடன் ஒப்பிட ஈடு இணையற்ற சத்துக்களைக் கொண்ட சுவையான அரிசி.திருமணத்திற்கு தயாராக இருக்கும் ஆண்கள், பெண்களுக்கு ஏற்ற அரிசி. குழந்தையின்மையை போக்கும் அற்புதமான அரிசி.
ஆயத்த நேரம் : – 6 hours
சமைக்கும் நேரம் : – 45 minutes
மொத்த நேரம் : – 6 hours 45 minutes
பரிமாறும் அளவு : – 2

தேவையான பொருட்கள்

  • 1 கப் மாப்பிள்ளை சம்பா அரிசி
  • ½ கப் தேங்காய் துருவல்
  • உப்பு 
  • 4 வர மிளகாய்
  • 2 ஸ்பூன் நெய்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் உளுந்து
  • 15 முந்திரிபருப்பு
  • 10 நிலக்கடலை
  • கறிவேப்பிலை

செய்முறை

  • மாப்பிள்ளை சம்பா அரிசியினை ஆறு மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
  • பின் ஒரு கப் அரிசிக்கு ஐந்து கப் தண்ணீர் சேர்த்து சிறுதீயில் 30-40 நிமிடம் வேகவிடவும். 
  • மண்பானையில் வேகவைக்க எளிதாகவும், சுவையானதாகவும் அரிசி வேகும்.
  • நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்து மூடிவைக்கவும், மீதமிருக்கும் தண்ணீரை வடிக்கவேண்டாம். (நிறைக்கட்டி வேகவிடவேண்டும்)
  • வாணலியில் நெய்விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, முந்திரிபருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
  • பருப்பு வகைகள் பொன்னிறமானவுடன் தேங்காய் துருவலைச் சேர்த்து அடுப்பை அணைக்கவும். பின் லேசாக பிரட்டி விடவும்.
  • பின் தேவையான உப்புடன் வேகவைத்திருக்கும் மாப்பிள்ளை சம்பா சாதத்தினையும் சேர்த்து கிளறி பரிமாறவும்.
(1 vote)

1 thought on “மாப்பிள்ளை சம்பா தேங்காய் சாதம்

  1. Dev

    5 stars
    சத்தானது

Comments are closed.