palaya satham, neeragaram, fermented rice benefits and uses, traditional rice neeragaram, maapillai samba neeragaram

மாப்பிள்ளை சம்பா நீராகாரம் / Mappillai Samba Neeragaram – Fermented Rice

வைட்டமின் B6, B12 போன்றவை இந்த பழைய சாதத்தில் அதிகம் உருவாகிறது. புரதம் மற்றும் மாவுச் சத்து எளிதில் செரிக்கப்படும் தன்மை பெறுகிறது. ஓர் இரவு முழுவதும் ஊறுவதால், அதன் ஊட்டச் சத்துக்கள் மற்றும் அதில் உருவாகும் நுண்ணுயிர்களும் தான் இந்த சத்துக்குக் காரணம். எளிதில் செரிக்கப்படும் தன்மையைப் பெறுவதால் செரிமானத்துக்கும் நல்லது. ஊட்டச்சத்துகள் கரைந்திருப்பதால் இந்த நீராகாரம் உடலுக்கு வலுவைக் கொடுப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 

palaya satham, neeragaram, fermented rice benefits and uses, traditional rice neeragaram, maapillai samba neeragaram

மேலும் மாப்பிள்ளை சம்பா அரிசியினைப் பற்றியும் அதன் சத்துக்கள் நன்மைகளைப் பற்றியும் தெரிந்துகொள்ள – மாப்பிள்ளை சம்பா அரிசி.

நீராகாரத்தின் பயன்கள் மற்றும் நன்மைகள் தெரிந்துக்கொள்ள – நீராகாரம்.

தேவையான பொருட்கள்

  • ¼ கப் மாப்பிள்ளை சம்பா அரிசி
  • மோர்
  • 5 சின்ன வெங்காயம்
  • உப்பு

செய்முறை

  • முதல் நாள் பாரம்பரிய அரிசியான மாப்பிள்ளை சம்பா அரிசியினை இரண்டு மூன்று மணி நேரம் முதலில் ஊறவைத்து, பின் அதனை ஒரு மண் சட்டியில் இரண்டு கப் தண்ணீர் விட்டு சிறுதீயில் நாற்பது நிமிடங்கள் வேகவிடவும். 
  • நன்கு மலர்ந்து வெந்த மாப்பிள்ளை சம்பா சாதத்தினை ஆறவைக்கவும். 
  • பின் அதில் குளிர்ந்த நீரினை ஊற்றி மூடிவைக்கவும்.
  • மறுநாள் காலை அந்த சோற்றினை நீருடன் நன்கு கரைக்க வேண்டும். 
  • கரைத்த அந்த கரைசலில் தேவையான அளவு மோர், நறுக்கிய சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து பருகவும். 
  • கொத்தமல்லி, இஞ்சி, கருவேப்பில்லை, பெருங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து அருந்த சுவையும், மணமும் கூடும். 
  • காலையில் வெறும் வயிற்றில் இதனை அருந்த உடனடியாக வயிறு குளிரும். பலவகையான வியாதிகள் கட்டுப்படும். 
  • இந்த மாப்பிள்ளை சம்பா நீராகாரம், குழந்தை இன்மைக்கு மாமருந்து. 
palaya satham, neeragaram, fermented rice benefits and uses, traditional rice neeragaram, maapillai samba neeragaram

மாப்பிள்ளை சம்பா நீராகாரம்

(1 vote)



வைட்டமின் B6, B12 போன்றவை இந்த பழைய சாதத்தில் அதிகம் உருவாகிறது. புரதம் மற்றும் மாவுச் சத்து எளிதில் செரிக்கப்படும் தன்மை பெறுகிறது.


⏲️ ஆயத்த நேரம்
15 hrs

⏲️ சமைக்கும் நேரம்
45 mins

🍴 பரிமாறும் அளவு
1

🍲 உணவு
நீராகாரம்


தேவையான பொருட்கள்
  • ¼ கப் மாப்பிள்ளை சம்பா அரிசி
  • மோர்
  • 5 சின்ன வெங்காயம்
  • உப்பு
செய்முறை
  1. முதல் நாள் பாரம்பரிய அரிசியான மாப்பிள்ளை சம்பா அரிசியினை இரண்டு மூன்று மணி நேரம் முதலில் ஊறவைத்து, பின் அதனை ஒரு மண் சட்டியில் இரண்டு கப் தண்ணீர் விட்டு சிறுதீயில் நாற்பது நிமிடங்கள் வேகவிடவும். 
  2. நன்கு மலர்ந்து வெந்த மாப்பிள்ளை சம்பா சாதத்தினை ஆறவைக்கவும். 
  3. பின் அதில் குளிர்ந்த நீரினை ஊற்றி மூடிவைக்கவும்.
  4. மறுநாள் காலை அந்த சோற்றினை நீருடன் நன்கு கரைக்க வேண்டும். 
  5. கரைத்த அந்த கரைசலில் தேவையான அளவு மோர், நறுக்கிய சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து பருகவும். 
  6. கொத்தமல்லி, இஞ்சி, கருவேப்பில்லை, பெருங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து அருந்த சுவையும், மணமும் கூடும். 
  7. காலையில் வெறும் வயிற்றில் இதனை அருந்த உடனடியாக வயிறு குளிரும். பலவகையான வியாதிகள் கட்டுப்படும். 
  8. இந்த மாப்பிள்ளை சம்பா நீராகாரம், குழந்தை இன்மைக்கு மாமருந்து. 

(1 vote)

1 thought on “மாப்பிள்ளை சம்பா நீராகாரம் / Mappillai Samba Neeragaram – Fermented Rice

  1. Kariyamuthan

    5 stars
    Healthy & Thank you

Comments are closed.