Welcome to HealthnOrganicsTamil !!!

மாப்பிள்ளை சம்பா அரிசி / Mapillai Samba Rice

கல்யாணக் கல்லும் மாப்பிள்ளை சம்பா அரிசியும்

ஒவ்வொரு உயிரினமும் தனது வம்சத்தை வளர்ப்பதையும், வாரிசினைப் பெருக்குவதனையும் தலையாய கடமையாக எண்ணுகிறது.

என்னதான் மக்கள் தொகையும், குழந்தைகள் காப்பகங்களும் ஏன் குழந்தைப்பேறின்மை மையங்களும் அதிகரித்த வண்ணம் இருந்தாலும், ஒவ்வொருவரும் தனக்கு ஒரு வாரிசு அதுவும் தனது இரத்தத்திலிருந்து பிறக்கும் ஒரு வாரிசு தேவை என்ற எண்ணம் அன்று முதல் இன்று வரை அனைவரின் எண்ணத்திலும் மேலோங்கி உள்ளது. சம்பாதித்த இலச்சங்களை வைத்துக்கொண்டு எத்தனை கோடிகளை வேண்டுமானாலும் கடனை உடனை வாங்கி மருத்துவம் செய்து தனக்கென்று ஒரு வாரிசினைப் பெறுவது இன்றைய நடைமுறையாகவே உள்ளது.

அனைத்து ஜீவ ராசிகளின் இயக்கத்திலும் மிக முக்கியமான தருணம் அவற்றில் இனப்பெருக்க காலம். ஒவ்வொரு உயிரினமும் தனது வம்சம் செழிக்க தனது வாழ்வையே பனையமாகவும் வைக்கிறது. இரு உயிர் இணைந்தலும் மறு உயிர் ஜெனித்தலும் இயற்கையான ஒன்றாக வெளிப்பட்டாலும் அவற்றில் பல பல வெளிப்படுத்தாத சுவாரஸ்யங்களும் இரகசியங்களும் உள்ளது. பல உயிரினங்கள் ஏதோ இணைவது ஏதோ ஈன்றுவது என்றில்லாமல் தனது வம்சத்தை காக்க பிறக்கும் புது உயிரை படைக்க ஒரு தவத்தையே மேற்கொள்கிறது. ஒவ்வொரு முறையில் ஆயிரம் ஆயிரம் முட்டை போடும் பூச்சிகளுக்கும், குறுஞ்சிப் பூவைப் போல் தவமிருந்த்து பெரும் சிங்கத்திற்கும் யானைக்கும் எத்தனை எத்தனை வேறுபாடுகள்.

இனப்பெருக்கம்

இனப்பெருக்கம் சாதாரண நிகழ்வாக இருந்தாலும் அதற்காக பலப்பல இன்னல்களையும், சாகசங்களையும் மேற்கொள்ளும் தேனீக்கள், ஆமைகள், நண்டுகள் ஏன் மனிதனும் பிரம்மிக்கத் தக்க ஒரு தான். ஏதோ போர போக்கில் தனது பேறுகாலத்தை நிகழ்த்தாது, அதற்காக பிரத்தியேக துணை, தன்மை, காலம், இடம், தகுதி, தட்ப வெட்ப நிலை, சூழல், அரவணைப்பு, பாதுகாப்பு, பக்குவம் என எத்தனை எத்தனை விதிமுறைகளை இந்த ஆறறிவில்லாத ஜீவன்களே கடைப்பிடிக்கிறது. ‘காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு தான்’ என்பது நவீன யுகத்திலும் பிரதிபலிக்கிறது.

சாதாரண உயிரினத்திற்கு தெரிந்தது படைப்பின் உச்சகட்ட வளர்ச்சியில் இருக்கும் மனிதனுக்கு தெரியாமலா இருக்கும். செயற்கை நவீனம் வருவதற்கு முன் பத்தாயிரம் ஆண்டுகளாக வலிமையான தலைமுறையையும், வளமான வாழ்வையும் அளவோடும் சீரோடும் பக்குவமாக வாழ்ந்து வழிநடத்தினார் நமது முன்னோர்கள்.

தமிழர் பெருமை

வாழையடி வாழையாக வாழ்வதின் சிறப்பினை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்த சாத்திரங்களும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்த திருக்குறளும் பத்தாயிரம் ஆண்டுகளாக கடைப்பிடிக்கும் நமது கலாச்சாரத்திற்கு ஈடு இணையற்ற கலாச்சாரம் உலகின் எங்கும் காணோம்.

மக்கட்பேறு

அறிவறிந்த மக்கட்பேறு, பண்புடைய மக்கட்பேறு எனக் குழந்தையின் இன்றியமையாமை குறித்து விளக்கிச் சொல்கிறார் திருவள்ளுவர்.  அறிவையும், துணிவையும் அழகிய பண்புகளையும் இளமையில் குழந்தைகளுக்கு எளிதாகக் கற்றுத் தருவது குழந்தை இலக்கியமாகவே திருக்குறள் கூறுகிறது. அந்த அறிவையும், துணிவையும் சிறந்த பண்புகளுடன் குழந்தைகளுக்கு உயிரணு மரபணு மூலம்  கடத்தக் கூடியவர்கள் பெற்றோர்கள் தான்.

ஒரு பள்ளிக்கூடம் தரமான கல்வியைத் தரலாம், ஒரு மருத்துவரை அல்லது பொறியியல் வல்லுனரைத் தரலாம், ஆனால் அதற்கு அடிப்படையான நற்பண்புகளுடன் கூடிய குழந்தையை பெற்றோர் மட்டுமே அளிக்க முடியும்.

ஒரு பள்ளிக்கூடம் தரமான கல்வியைத் தரலாம், ஒரு மருத்துவரை அல்லது பொறியியல் வல்லுனரைத் தரலாம், ஆனால் அதற்கு அடிப்படையான நற்பண்புகளுடன் கூடிய குழந்தையை பெற்றோர் மட்டுமே அளிக்க முடியும்.

இதனை இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பு தாய் தந்தையின் Genes வலுப்பெற்றிருந்தால் தான் உருவாகும் குழந்தையின் உடல் திறன் மனவளம் மிகுதியாக இருக்கும் என்கிறது. இதனை எந்த பள்ளிக்கூடமும், தனித் திறன் பயிற்சியும் அளிக்காது என்கிறது.  

பெயர் சொல்ல பிள்ளை என்ற நடைமுறை வழக்கு நமது திருநாட்டில் உள்ளது. தாத்தா, பாட்டியின் பெயரை பேரன் பேதிக்கு வைத்து அழைப்பது நமது வழக்கம். இதன் மூலம் பெயர் மட்டும் தலைமுறை தலைமுறையாக கடத்தப்படுவதில்லை அவர்களின் ஆரோக்கியம், பேச்சு, உடல் அமைப்பு, உடல் வலிமை, மனோதிடம், பழக்க வழக்கம், பண்புகள், அறிவுக்கூர்மை, பாதுகாப்பு, தன்னம்பிக்கை, பக்குவம், குடும்பப் பிணைப்பு, பாசம் என பல தன்மைகள் Genes மூலம் கடத்தப்படுகிறது.   

“நில விதைகளுக்கேற்ப பயிரின் இயல்பிருத்தல் போல
தாய், தந்தையர் உடல் நலனும் இயல்பும் பிள்ளையின்
வளர்ப்புக்கு நீரும் ஒளியும் போன்றன”

என்று குழந்தை அமைவதன் முக்கியத்துவத்தை நம் முன்னோர்கள் கூறுகின்றனர்.

அனைத்து பேறுகளிலும், அனைத்து செல்வங்களிலும் மிக முக்கியமான செல்வம் என்று சொல்லும் குழந்தைச்செல்வமும், மக்கட் பெரும் நல்ல விதத்தில் அமைய தாயும் தந்தையும் மனதாலும், உடலாலும் ஆரோக்கியமாகவும் செம்மையாகவும் இருத்தல் அவசியம் என்று பார்த்தோம்.

எப்பேர்ப்பட்ட கோட்பாடுகளையும் கொள்கைகளையும் எதார்த்தமாக வாழ்வியல், விளையாட்டு, பழக்கம் என்பனவற்றுடன் நடைமுறையில் கொண்டு வருவதுடன் அதனை செயல்பாட்டில் சிறப்பாக கொண்டுவந்தவர்கள் நமது முன்னோர்கள்.

அந்த வகையில் ஆரோக்கியத்திற்கு அச்சாணியாக இருக்கும் உணவு பழக்கத்தையும் ஒவ்வொரு செயலுக்கும் ஏற்றாற்போல் சிறப்பாக வடிவமைத்திருக்கின்றனர். திருமணத்திற்கு முன் ஆணும் பெண்ணும் நல்ல உடல், மன வலிமையை பெற்றிருக்க வேண்டும் என்பதற்காகவும் வள்ளுவர் வாய்மொழிக்கேற்ப வாரிசு அமைய வேண்டும் என்பதற்காகவும் அதற்கு தகுந்தாற்போல் அரிசி உணவில் தொடங்கி வீர விளையாட்டின் அவசியத்தையும் கூறியுள்ளார்.

தமிழர் வீர விளையாட்டு

திருமணத்திற்கான பிரத்தியேகமான உணவைப்பற்றி தெரிந்துகொள்வதற்கு முன் அதனுடன் பின்னிபிணைத்திருக்கும் வீர விளையாட்டைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

அந்த காலங்களில் திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்களுக்கு மாப்பிள்ளை தேடும் பொழுது படிப்பு, பணம், சம்பளம், நகை, வீடு, வாகனம் என்று பொருள் கணக்கு பார்க்கவில்லை. வீரம், குணம், தன்மை என்று மன உடல் வலிமையை மட்டுமே கணக்கிட்டனர். காரணம் பணம் இன்று வரும் நாளை போகும், இன்றைய இளைங்கர்களின் வாழவே அதில் அடங்கியுள்ளது.

பணம், வேலை போனால் வாழவே இருண்டது போல் துவண்டு விடுகின்றனர்.  ஆனால் மனதாலும் உடலாலும் வலிமையான அன்றைய ஆண்மகன்களுக்கு எந்த சூழலிலும் வாழக்கூடிய மனோதிடம் இருந்தது. இந்த காரணத்தாலேயே இவற்றை சோதனை செய்ய வீர விளையாட்டுகளை மேற்கொண்டனர். வீரவிளையாட்டுகளில், அதுவும் திருமணத்திற்காக காத்திருக்கும் ஆண்மகனுக்கு மிகவும் விருப்பமான விளையாட்டாக இருந்தது இளவட்டக்கல்லை தூக்கி தனது தோல் படை வழியாக பின்னால் போடும் விளையாட்டு.

அது என்ன இளவட்டக்கல் என்கிறீர்களா?

இளவட்டக்கல் பொதுவாகச் சுமார் 100 கிலோ எடைகொண்டதாகவும். முழு உருண்டையாக வழவழவென்று எந்தப்பிடிப்பும் இல்லாமல் கைக்கு அகப்படாத வடிவத்தில் இருக்கும். இளவட்டக் கல்லுக்குக் கல்யாணக் கல் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

இந்த இளவட்டக்கல்லை முதலில் குத்தங்காலிட்டு உட்கார்ந்த நிலையில் இருகைகளாலும் சேர்த்தணைத்து இலேசாக எழுந்து முழுங்காலுக்கு நகர்த்தி, பின்னர் முழுதாக நிமிர்ந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கல்லை நெஞ்சின் மீது ஏற்றி, பின்னர் தோள்பட்டைக்கு நகர்த்தி முழுதாகச் சுமக்க வேண்டும்.

தோள்பட்டைக்கு இளவட்டக்கல் வந்துவிட்டால் அடுத்துக் கல்லோடு கோயிலை வலம்வருவது குளத்தை வலம்வருவது என வீரத்தை தொடர்கின்றனர். இந்த வீர விளையாட்டை மேற்கொள்ள இருக்கும் ஆணுக்கு அதாவது புது மாப்பிளைக்கு உடல் வலிமையை அதிகரிக்க ஆறு மதத்திற்கு முன்னிருந்து பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட மாப்பிள்ளை சம்பா அரிசி உணவுகள் வழங்கப்பட்டன.

குண்டு, மட்ட, புழுங்கல், பச்சை, பொன்னி என்ற அரிசிகளின் பெயர்களை மட்டுமே கேட்டு வாங்கி வந்த நமக்கு மாப்பிள்ளை சம்பா என்ற பெயர் கண்டிப்பாக புதிதாகவும் வியப்பாகவும் தான் இருக்கும். சம்பா அரிசி கூட கேள்விப்பட்டிருக்கோம், ஆனா மாப்பிள்ளை சம்பாவா!!

மாப்பிள்ளைகளுக்காக தனியாக ஒரு அரிசி – மாப்பிள்ளை சம்பா அரிசி (சிகப்பரிசி)

மாப்பிள்ளைகளுக்காக தனியாக ஒரு அரிசியா என்ற உங்களின் ஆச்சரியமான கேள்வி புரிகிறது..

பொதுவாகவே அரிசி (பாரம்பரிய அரிசி) நல்லது தான் என்று முன்பே பார்த்தோம். அதிலும் மனிதனின் வளமான வம்சத்தை அதுவும் வழிவழியாக பல தலைமுறைகளைக் கடந்தும் பெயர்சொல்லும் விதமாக வாழ்ந்துக் காட்டுவதற்கென்று ஒரு அரிசி என்றால் நிச்சயம் வியப்பாகத்தான் இருக்கும்.

நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளின் சுழட்சியிலும் காலை எழுந்தது முதல் இரவு அசதியான உறக்கம் வரை ஓடுவதும், ஓடிக் கொண்டே இருப்பதும் நமது வாரிசுகளுக்காகத் தானே. ன்னதான் ஓடி ஓடி சம்பாதித்தாலும் அவற்றை பாதுகாக்கத் தெரியாத அளவு வாரிசு இருந்தால் சொல்லவா வேண்டும் பெற்றோர் படும் வேதனையினை.

இன்றைய தரமில்லாத உணவுகளாலும், சக்கையான அரிசியினாலும் பெற்றோரின் நிலைமையே இவ்வாறுதான் உள்ளது. பின் குழந்தைகளின் சமர்த்தியதை பற்றி என்ன பேசுவது.  

இவற்றிற்கெல்லாம் தீர்வாகத்தான் இருந்திருக்கிறது நமது மாப்பிள்ளை சம்பா அரிசி. புது மாப்பிள்ளைக்கென்று இந்த அரிசியால் செய்த உணவுகளை ஆறு மாதம் உண்டு வர சீரான உடல் வலிமையையும் தரமான உயிரணுக்களும் பெருகுகிறது.’தொடர்ந்து இந்த அரிசியை உண்டு வர ஆரோக்கியமான உடலைப் பெறலாம்’ வேறு என்ன வேண்டும் வளமான வாழ்வைப் பெற.

மாப்பிள்ளை சம்பா மருத்துவகுணம்

ஆறுமாதம் வளரக்கூடிய சம்பா நெல் வகையைச் சேர்ந்தது மாப்பிள்ளை சம்பா. பட்டை தீட்டாது உமியை மட்டும் நீக்கிய அரிசி சற்று மோட்டாவாக சிகப்பு நிறத்தினை கொண்டிருக்கும். 160 நாளில் இந்த நெல் ரகம் ஆளுயரம் வரை வளர்ந்து அறுவடைக்கு தயாராகக் கூடியது.

‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல’ என்பதினைப் போல் சிகப்பாக இருக்கும் அரிசியெல்லாம் மாப்பிள்ளை சம்பா இல்லை என்பதை மறந்து விடக் கூடாது.

வேதியியல் உரங்கள், பூச்சிக் கொல்லிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் பல பட்டதாரி இளைஞர்களும் சாகுபடி செய்யும் சிறந்த ராகம் இது. வறட்சி, வெள்ளம் என எல்லா காலங்களிலும், எல்லா தட்ப்ப வெப்பகளிலும் தாக்கு பிடித்து வளரக்கூடியது இந்த அரிசி.

Low Glycemic Index

குறைந்த GI (glycemic index) கொண்டுள்ள இந்த அரிசியில் புரதம், வைட்டமின், தாது உப்புக்கள், நார் சத்துக்கள், கொழுப்பு சத்துக்கள் உள்ளது.

மாப்பிள்ளை சம்பா சத்துக்கள்

பல சத்துக்களைக் கொண்டிருக்கும் இந்த அரிசி அதிக வைட்டமின் பி சத்துக்களைக் கொண்டிருக்கிறது. புது மாப்பிள்ளைகள் மட்டுமில்லாது சர்க்கரை வியாதி உள்ளவர்களும் தொடர்ந்து இந்த அரிசி உணவு உண்டு வர சர்க்கரை அளவின் கட்டுப்பாட்டையும் கண்கூடாகக் காணலாம். நரம்பு தளர்ச்சி உள்ளார்கள் இந்த அரிசியினை களைந்த நீரினை அருந்தலாம். நரம்பு தளர்வு படிப்படியாக பலப்படும்.

இந்த மோட்டா சிகப்பரிசியை வைத்து என்னன்ன உணவுகள் தயாரிக்கலாம் என்று இனி பார்ப்போம்.சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து போன்ற சத்துக்களை அதிகம் கொண்டிருக்கும் இந்த மாப்பிள்ளை சம்பா அரிசியில் செய்த சோறு தனி சுவையுடனும், மணத்துடனும் இருக்கும்.

மாப்பிள்ளை சம்பா அரிசியை எப்படி சமைப்பது

இரண்டு மணி நேரம் முதலில் ஊறவைத்து பின் அந்த நீருடன் அரிசிக்கு தேவையான அளவு அதாவது ஒரு கப் அரிசிக்கு ஐந்து கப் தண்ணீர் ஊற்றி சிறு தீயில் சட்டியில் பொங்குவது சிறந்த பலனைத் தரும். மண் பானையில் சமைப்பது கூடுதல் ருசியினைத் தரும். குறைந்தது 40 நிமிடம் வரை வேகக் கூடியது. திட்டமான அளவு தண்ணீர் வைத்து வேகவிடுவது சிறந்தது. இவ்வாறு செய்வதால் மீதம் நீர் வடிக்க வேண்டிய தேவை இருக்காது. இதில் குழம்பு, சாம்பார், ரசம், மோர் என்று சேர்த்து உண்ணலாம். மேலும் மாப்பிள்ளை சம்பா அரிசியை சமைக்கும் முறை விளக்கமாக தெரிந்துக் கொள்ள…

எளிதாகவும் விரைவாகவும் சற்று குலைந்தும் சிறுத்தும் சாதம் இருக்கலாம் என்று நினைப்பவர்கள் தேவைப்பட்டால் அரிசியை ஒன்று இரண்டாக உடைத்து பயன்படுத்தலாம்.

மாப்பிள்ளை சம்பா சிகப்பரிசி நீராகாரம்

மாப்பிள்ளை சம்பா சாதத்தில் நீரூற்றி வைத்து அதனை மறுநாள் காலை நன்கு கரைத்து அதில் நார்த்தை இலை, சீரகம், வெங்காயம் சேர்த்து உண்ணலாம். இது உடலை குளிர்விப்பதுடன் வயிற்றிற்கு தேவையான பல நன்மை செய்யும் பாக்டீரியாக்களை உற்பத்தி செய்கிறது. வயிறு அல்சர், வயிறெரிச்சல், வயிற்று புண் போன்றவற்றிற்கு நல்ல மருந்து.  

மாப்பிள்ளை சம்பா இட்லி, தோசை

இட்லி, தோசை மாவு அரைக்கும் பொழுது நன்கு பங்கில் ஒரு பங்கிற்கு இந்த சிகப்பரிசியை அரிசியை ஊறவைத்து அரைக்கலாம். இட்லி சற்று சிகப்பு நிறமாக தனி சுவையுடன் இருக்கும். தோசை பிரியர்களுக்கு இந்த தோசை வரப்பிரசாதமாகவே இருக்கும்.

இந்த மாப்பிள்ளை சம்பா அரிசியினை மாவாகவும் திரித்து இடியப்பம், புட்டு, கொழுக்கட்டை செய்யலாம். சற்று  ரவையாக திரித்து மாப்பிள்ளை சம்பா அரிசி உப்புமா தயாரித்தும் உண்ணலாம்.

பலகாரங்கள், சாத வகைகள் மட்டுமில்லாது இந்த மாப்பிள்ளை சம்பா அரிசியில் வத்தல் வடகம் என எல்லா உணவுகளும் செய்யலாம்.
சிறந்த சத்துக்களும், நன்மைகளும் கொண்ட இந்த சிகப்பரிசியை உணவை எளிதாக தயாரித்து நாமும் உண்டு வளமான செழிப்பாக தலைமுறையை உருவாக்குவோம்.

4.2/5 - (5 votes)
சிந்தனை துளிகள் :

கோவில் விளங்கக் குடி விளங்கும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!