மாப்பிள்ளை சம்பா அரிசி – நம் பாரம்பரிய அரிசி

மாப்பிள்ளை சம்பா அரிசி / Mappillai Samba rice

பாரம்பரிய அரிசிகளில் சிறப்பு வாய்ந்த ஒரு அரிசி நம் மாப்பிள்ளை சம்பா அரிசி. இளவயதினருக்கு அதாவது திருமணத்திற்கு தயாராக இருக்கும்.. திருமணமான ஆண்களுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்த அரிசி மாப்பிள்ளை சம்பா. அதனாலேயே அப்பெயர் பெற்றது. மேலும் மாப்பிள்ளை சம்பாவைபற்றி தெரிந்து கொள்ள இங்கு இணையவும்.

மாப்பிள்ளை சம்பா சிகப்பு அரிசி வகைகளில் ஒன்று. மாப்பிள்ளை சம்பா அரிசி பல பல மருத்துவ குணம் உடையது.

மாப்பிள்ளை சம்பா அரிசியின் சத்துக்கள் மற்றும் அதன் பயன்கள் (Nutrients and Health Benefits)

மாப்பிள்ளை சம்பா அரிசியில் புரத சத்து (Protein), நார்சத்து (Fiber), தாதுச்சத்து (Minerals) மற்றும் உப்புச்சத்தும் நிறைந்துள்ளது. உடலுக்கு வலுவையும் பலத்தையும் அளிக்ககூடிய ஏராளமான சத்துகளும் நிறைந்துள்ளது.

மருத்துவ பயன்கள்(Health Benefits)

  • ஆரோக்கியமான குழந்தைபேறு அளிக்கும் சிறந்த அரிசி.
  • ஆண் பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மை, குழந்தையின்மையை போக்கும் அரிசி.
  • திருமணமாகும் ஆண்களுக்கு தேவையான உடல் வலிமையை அதாவது அந்தகாலத்தில் வீரத்தை வெளிபடுத்த இளவட்டக்கல் தூக்கும் முறை இருந்தது.. இதனை எளிமையாக தூக்க இந்த மாப்பிள்ளை சம்பா அரிசி உதவியது.
  • மாப்பிள்ளை சம்பாவில் நோய் எதிர்ப்பு சக்தி (Immune power) அதிகம் உள்ளது.
  • எளிதில் சோர்வடையாமல் சுறுசுறுப்பாக (Increase Activeness) இருக்க வைக்கும்.
  • ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
  • தொடர்ந்து உண்டுவர வாய்புண், வயிற்றுப்புண் குணமாகும்.
  • மலச்சிக்கலுக்கு சிறந்த அரிசி.
  • எலும்புகளுக்கு பலத்தை அளிக்கும்.
  • நீரிழிவு நோயாளிகளுக்கு (Diabetics) நன்மை தரும்
  • நரம்புகளுக்கு வலுவூட்டும்.
  • உடல் வலிமையை அதிகரிக்கும்.


மாப்பிள்ளை சம்பா உணவுகள் (Mappillai Samba Recipes)

மாப்பிள்ளை சம்பா அரிசியை தினமும் நம் உணவில் சேர்த்து கொள்வதால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும்.

மாப்பிள்ளை சம்பா அரிசியில் சாதம் (Rice), இட்லி (Idli), தோசை (Dosa), புட்டு, இடியப்பம், பணியாரம், முறுக்கு என எல்லா உணவுகளும் செய்து உண்ணலாம்.

நல்ல ருசியுடனும் ஊட்டத்துடனும் இருக்கும் இயற்கை விவசாயம் மூலம் விளைந்த மாப்பிள்ளை சம்பா அரிசியினை சாதமாக உட்கொள்ள பெண்களுக்கு ஏற்படும் மலட்டுதன்மை நீங்கும்.

https://www.youtube.com/watch?v=liJoAf9Qopk

திருமணமாக இ ருக்கும் ஆண்கள் இந்த மாப்பிள்ளை சம்பா நீரகரத்தை ஒரு மண்டலம் காலையில் பருக உடல் வலிமை கூடும்.

மாப்பிள்ளை சம்பா அரிசி களைந்த தண்ணீரைக் குடிக்க நரம்பு தளர்ச்சி விரைவாக குணமாகும்.

குழந்தைகளுக்கு இந்த மாப்பிள்ளை சம்பா அரிசி முறுக்கு, புட்டு, தோசை செய்து கொடுக்க உடல் பலம் கூடும், எலும்புகள் வலுபெறும்.

எளிமையாக இந்த மாப்பிள்ள சம்பா அரிசியை சமைக்கும் முறையை இந்த காணொளியில் பார்போம்.. – How to cook mappila samba rice in tamil

https://www.youtube.com/watch?v=bzQSJZbigjI
(2 votes)