மாப்பிள்ளை சம்பா தயிர் சாதம்

அட்டகாசமான சுவையும், அபாரமான சத்துக்களையும் கொண்ட ஒரு அற்புதமான அரிசி நம் பாரம்பரிய மாப்பிள்ளை சம்பா அரிசி. திருமணமான ஆண்கள், பெண்களுக்கு இந்த அரிசி ஒரு வரப்பிரசாதமென்றே கூறலாம். குழந்தைபேறு, அதிலும் இயற்கையாக வீரியமிக்க விந்தணுவைக் கொண்டு கருத்தரித்து சுகப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைக்கு ஈடு இணையே இவ்வுலகில் இல்லை எனலாம். இதனை எளிமையாகவும் சாதாரணமாகவும் சாத்தியப்படுத்தும் ஒரு அற்புதமான அரிசி நம் தமிழகத்தின் பாரம்பரிய சிகப்பரிசி மாப்பிள்ளை சம்பா.

இன்று மலட்டுத்தன்மையும், சுகப்பிரசவமின்மையும் சர்வ சாதாரணமாக பல லட்சங்களை விழுங்கி ஒரு குழந்தையை உருவாக்குகிறது. ஆனால் இயற்கையாக ஒரு குழந்தையை பிறப்பதற்கும், நவீன முறையால் ஒரு குழந்தை பிறப்பதற்கும் பல மாறுபாடுகளும், வேறுபாடுகளும் உள்ளது. இதனை எதிர்கொள்ள நமக்கு ஒரு புது நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளிக்கிறது இந்த பாரம்பரிய அரிசி. அன்றாடம் நாம் உண்ணும் உணவு இவற்றை அளிக்கிறது என்றால் நம்பமுடிகிறதா?..

நமது முன்னோர்கள் உண்ட மிக சிறந்த பாரம்பரிய அரிசியான மாப்பிள்ளை சம்பா – பெயர் காரணம் மற்றும் பயன்கள், வரும் தலைமுறையினருக்கு புது உத்வேகத்தை அளிக்கும் அரிசி. இதில் மிக எளிமையாக எவ்வாறு தயிர் சாதம் செய்வது என பார்போம்.

மாப்பிள்ளை சம்பா தயிர் சாதம்

சத்துக்களும் சுவையும் நிறைந்த அற்புத உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள்.

தேவையான பொருட்கள்

செய்முறை

மாப்பிள்ளை சம்பா தயிர் சாதம்



சத்துக்களும் சுவையும் நிறைந்த அற்புத உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள்.



தேவையான பொருட்கள்
  • 1 கப் மாப்பிள்ளை சம்பா அரிசி
  • 2 கப் தயிர்
  • 1 ஸ்பூன் இஞ்சி விழுது
  • சிறிது பெருங்காயம்
  • உப்பு
செய்முறை
  1. மாப்பிள்ளை சம்பா அரிசியை முதலில் இந்த பகுதியில் குறிப்பிட்டுள்ளது போல் ஊறவைத்து, வேகவைத்துக் கொள்ள வேண்டும்.
  2. மாப்பிள்ளை சம்பா அரிசியை சிறிது அதிகம் நீர் விட்டு நன்கு குழைய வேகவைத்து எடுத்துக் கொள்ளவேண்டும்.
  3. மாப்பிள்ளை சம்பா அரிசி வெந்தபின் அதனை ஒரும் பாதியுமாக நன்கு மசித்துக்கொள்ளவேண்டும்.
  4. மாப்பிள்ளை சம்பா சாதத்தில் சிறிது உப்பு, இஞ்சி விழுது, பெருங்காயம் சேர்த்து அதனுடன் தயிர் விட்டு கலந்துவிட சுவையான மாப்பிள்ளை சம்பா தயிர் சாதம் தயார்.