எளிதில் ஜீரணிக்க கூடிய சிறந்த உணவு அவல். பக்குவமாக தயாரிக்கப்பட்ட சிகப்பரிசி மாப்பிள்ளை சம்பா அவல் கொண்டு ஏதேனும் ஒரு உணவை அவ்வப்பொழுது தயாரித்து உண்ண உடல் பலம் கூடும், சத்து குறைபாடு அகலும்.
குறைந்த GI(glycemic index) கொண்டுள்ள இந்த மாப்பிள்ளை சம்பா அரிசியில் அரிசியில் புரதம், வைட்டமின், தாது உப்புக்கள், நார் சத்துக்கள், கொழுப்பு சத்துக்கள் உள்ளது.
நீரிழிவு, உடல் பருமன், குழந்தையின்மைக்கு சிறந்த உணவு மாப்பிள்ளை சம்பா அவல் பொங்கல்.
மேலும் மாப்பிள்ளை சம்பா அரிசியைப் பற்றி தெரிந்து கொள்ள – இங்கு இணையவும். மாப்பிள்ளை சம்பா அரிசியின் பயன்கள் நன்மைகள் – இங்கு இணையவும்.
தேவையான பொருட்கள்
- 2 கப் மாப்பிள்ளை சம்பா அவல்
- 2 கப் வெல்லம்
- ¼ கப் பாசிப்பயிறு
- 2 ஏலக்காய்
- 10 உலர்ந்த திராட்சை
- 10 முந்திரி
- 1 கப் தேங்காய் பால்
- 1 கப் தேங்காய் துருவல்
- 3 ஸ்பூன் நெய்
செய்முறை
வெல்லத்தை பொடித்து தண்ணீரில் கலந்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பாசிப் பருப்பை குழைய வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
கெட்டியாக இருக்கும் சிவப்பு மாப்பிள்ளை சம்பா அவலை வெந்நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
தேங்காய்த் துருவலை நெய்யில் வறுத்து எடுக்கவும்.
வெந்த பாசிப்பருப்புடன், ஊற வைத்த மாப்பிள்ளை சம்பா அவலை சேர்க்கவும்.
அதனுடன் வெல்லப்பாகு கலந்து சிறு தீயில் கொதிக்க விடவும்.
அடிபிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
நன்கு இறுகி குழைந்து வந்தவுடன் அடுப்பை அணைத்து தேங்காய் பால் ஊற்றி நன்கு தல தல வென்று பொங்கல் பதமாக கலந்துவிட வேண்டும்.
நெய்யில் வறுத்த ஏலக்காய், முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை, வறுத்த மீதமுள்ள தேங்காய் துருவல், நெய் ஊற்றி கிளறி விடவும்.
நெய் மணத்துடன் கமகமக்கும் சுவையான மாப்பிள்ளை சம்பா அவல் பொங்கல் தயார்.
மாப்பிள்ளை சம்பா அவல் பொங்கல்
தேவையான பொருட்கள்
- 2 கப் மாப்பிள்ளை சம்பா அவல்
- 2 கப் வெல்லம்
- ¼ கப் பாசிப்பயிறு
- 2 ஏலக்காய்
- 10 உலர்ந்த திராட்சை
- 10 முந்திரி
- 1 கப் தேங்காய் பால்
- 1 கப் தேங்காய் துருவல்
- 3 ஸ்பூன் நெய்
செய்முறை
- வெல்லத்தை பொடித்து தண்ணீரில் கலந்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பாசிப்பருப்பை குழைய வேகவைத்துக் கொள்ள வேண்டும்.
- கெட்டியாக இருக்கும் சிகப்பு மாப்பிள்ளை சம்பா அவலை வெந்நீரில் ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.
- தேங்காய்த் துருவலை நெய்யில் வறுத்து எடுக்கவும்.
- வெந்த பாசிப்பருப்புடன், ஊறவைத்த மாப்பிள்ளை சம்பா அவலை சேர்க்கவும்.
- அதனுடன் வெல்லப்பாகு கலந்து சிறுதீயில் கொதிக்கவிடவும்.
- அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
- நன்கு இறுகி குழைந்து வந்தவுடன் அடுப்பை அணைத்து தேங்காய் பால் ஊற்றி நன்கு தலதல வென்று பொங்கல் பதமாக கலந்துவிட வேண்டும்.
- நெய்யில் வறுத்த ஏலக்காய், முந்திரிப் பருப்பு, உலர்ந்த திராட்சை, வறுத்த மீதமுள்ள தேங்காய் துருவல், நெய் ஊற்றி கிளறி விடவும்.
- நெய் மணத்துடன் கமகமக்கும் சுவையான மாப்பிள்ளை சம்பா அவல் பொங்கல் தயார்.