மாப்பிள்ளை சம்பா இட்லி

தமிழகத்தில் அன்றாடம் காலை உணவு என்பது பொதுவாக இட்லி. அந்த இட்லியையே மிகவும் சத்தான இட்லியாகவும் சிறந்த காலை உணவாகவும் அளிக்க ஆரோக்கியம் பலமடங்கு அதிகமாகும். ஆண்களுக்கு சிறந்த அரிசியான இந்த மாப்பிள்ளை சம்பா அரிசியில் இட்லி செய்து பெண்கள், குழந்தைகளும் எடுத்துக்கொள் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்.

குறைந்த GI(glycemic index) கொண்டுள்ள இந்த மாப்பிள்ளை சம்பா அரிசியில் புரதம், வைட்டமின், தாது உப்புக்கள், நார் சத்துக்கள், கொழுப்பு சத்துக்கள் உள்ளது.

பல சத்துக்களைக் கொண்டிருக்கும் இந்த மாப்பிள்ளை சம்பா அரிசி அதிக வைட்டமின் பி சத்துக்களைக் கொண்டிருக்கிறது. புது மாப்பிள்ளைகள் மட்டுமில்லாது சர்க்கரை வியாதி உள்ளவர்களும் தொடர்ந்து இந்த மாப்பிள்ளை சம்பா அரிசி உணவு உண்டு வர சர்க்கரை அளவின் கட்டுப்பாட்டையும் கண்கூடாகக் காணலாம். நரம்பு தளர்ச்சி உள்ளார்கள் இந்த அரிசியினை களைந்த நீரினை அருந்தலாம். நரம்பு தளர்வு படிப்படியாக பலப்படும்.

மேலும் மாப்பிள்ளை சம்பா அரிசியைப் பற்றி தெரிந்துகொள்ள – இங்கு இணையவும். மாப்பிள்ளை சம்பா அரிசியின் பயன்கள் நன்மைகள் – இங்கு இணையவும்.

மாப்பிள்ளை சம்பா இட்லி தேவையான பொருட்கள்

மாப்பிள்ளை சம்பா இட்லி செய்முறை

  • முதலில் மாப்பிள்ளை சம்பா அரிசியை 4 – 5 மணி நேரம் ஊறவைக்கவும். 
  • இட்லி அரிசியை இரண்டு மணிநேரமும், உளுந்தை 1 மணி நேரமும் ஊறவைக்கவும். 
  • முதலில் உளுந்தையும் அதன்பின் மாப்பிள்ளை சம்பா அரிசியுடன் இட்லி அரிசியையும் ஒன்றாக அரைத்து உப்பு கலந்து எட்டுமணிநேரம் புளிக்கவைக்கவும். 
  • மாப்பிள்ளை சம்பா இட்லி மாவு தயார். இதனை இட்லி தட்டில் ஊற்றி ஏழு நிமிடம் ஆவியில் வேகவைத்து பரிமாறலாம்.
5 from 4 votes

மாப்பிள்ளை சம்பா இட்லி

மாப்பிள்ளை சம்பா இட்லி – குறைந்த GI(glycemic index) கொண்டுள்ள இந்த மாப்பிள்ளை சம்பா அரிசியில் அரிசியில் புரதம், வைட்டமின், தாது உப்புக்கள், நார் சத்துக்கள், கொழுப்பு சத்துக்கள் உள்ளது.
Breakfast
Indian
idli recipe in tamil, red rice idli recipe, traditional rice idli
ஆயத்த நேரம் : – 12 hours
சமைக்கும் நேரம் : – 10 minutes
மொத்த நேரம் : – 12 hours 10 minutes
பரிமாறும் அளவு : – 4

தேவையான பொருட்கள்

செய்முறை

  • முதலில் மாப்பிள்ளை சம்பா அரிசியை 4 – 5 மணி நேரம் ஊறவைக்கவும். 
  • இட்லி அரிசியை இரண்டு மணிநேரமும், உளுந்தை 1 மணி நேரமும் ஊறவைக்கவும். 
  • முதலில் உளுந்தையும் அதன்பின் மாப்பிள்ளை சம்பா அரிசியுடன் இட்லி அரிசியையும் ஒன்றாக அரைத்து உப்பு கலந்து எட்டுமணிநேரம் புளிக்கவைக்கவும். 
  • மாப்பிள்ளை சம்பா இட்லி மாவு தயார். இதனை இட்லி தட்டில் ஊற்றி ஏழு நிமிடம் ஆவியில் வேகவைத்து பரிமாறலாம்.
(1 vote)

6 thoughts on “மாப்பிள்ளை சம்பா இட்லி

  1. Alamelamma

    5 stars
    Thank u

  2. MohanKumar Srinivasan

    5 stars
    Nice

  3. MohanKumar Srinivasan

    5 stars
    very Nice

Comments are closed.