தமிழகத்தில் அன்றாடம் காலை உணவு என்பது பொதுவாக இட்லி. அந்த இட்லியையே மிகவும் சத்தான இட்லியாகவும் சிறந்த காலை உணவாகவும் அளிக்க ஆரோக்கியம் பலமடங்கு அதிகமாகும். ஆண்களுக்கு சிறந்த அரிசியான இந்த மாப்பிள்ளை சம்பா அரிசியில் இட்லி செய்து பெண்கள், குழந்தைகளும் எடுத்துக்கொள் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்.
குறைந்த GI(glycemic index) கொண்டுள்ள இந்த மாப்பிள்ளை சம்பா அரிசியில் புரதம், வைட்டமின், தாது உப்புக்கள், நார் சத்துக்கள், கொழுப்பு சத்துக்கள் உள்ளது.
பல சத்துக்களைக் கொண்டிருக்கும் இந்த மாப்பிள்ளை சம்பா அரிசி அதிக வைட்டமின் பி சத்துக்களைக் கொண்டிருக்கிறது. புது மாப்பிள்ளைகள் மட்டுமில்லாது சர்க்கரை வியாதி உள்ளவர்களும் தொடர்ந்து இந்த மாப்பிள்ளை சம்பா அரிசி உணவு உண்டு வர சர்க்கரை அளவின் கட்டுப்பாட்டையும் கண்கூடாகக் காணலாம். நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் இந்த அரிசியினை களைந்த நீரினை அருந்தலாம். நரம்பு தளர்வு படிப்படியாக குணமாகும், நரம்புகள் பலப்படும்.
மேலும் மாப்பிள்ளை சம்பா அரிசியைப் பற்றி தெரிந்து கொள்ள – இங்கு இணையவும். மாப்பிள்ளை சம்பா அரிசியின் பயன்கள் நன்மைகள் – இங்கு இணையவும்.
மாப்பிள்ளை சம்பா இட்லி தேவையான பொருட்கள்
- 3 கப் மாப்பிள்ளை சம்பா அரிசி
- 1 கப் இட்லி அரிசி
- 1 கப் உளுந்து
- 1 ஸ்பூன் வெந்தயம்
- உப்பு
மாப்பிள்ளை சம்பா இட்லி செய்முறை
- முதலில் மாப்பிள்ளை சம்பா அரிசியை 4 – 5 மணி நேரம் ஊறவைக்கவும்.
- இட்லி அரிசியை இரண்டு மணி நேரமும், உளுந்தை 1 மணி நேரமும் ஊற வைக்கவும்.
- முதலில் உளுந்தையும் அதன்பின் மாப்பிள்ளை சம்பா அரிசியுடன் இட்லி அரிசியையும் ஒன்றாக அரைத்து உப்பு கலந்து எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும்.
- மாப்பிள்ளை சம்பா இட்லி மாவு தயார். இதனை இட்லி தட்டில் ஊற்றி ஏழு நிமிடம் ஆவியில் வேகவைத்து பரிமாறலாம்.
மாப்பிள்ளை சம்பா இட்லி
தேவையான பொருட்கள்
- 3 கப் மாப்பிள்ளை சம்பா அரிசி
- 1 கப் இட்லி அரிசி
- 1 கப் உளுந்து
- 1 ஸ்பூன் வெந்தயம்
- உப்பு
செய்முறை
- முதலில் மாப்பிள்ளை சம்பா அரிசியை 4 – 5 மணி நேரம் ஊறவைக்கவும்.
- இட்லி அரிசியை இரண்டு மணிநேரமும், உளுந்தை 1 மணி நேரமும் ஊறவைக்கவும்.
- முதலில் உளுந்தையும் அதன்பின் மாப்பிள்ளை சம்பா அரிசியுடன் இட்லி அரிசியையும் ஒன்றாக அரைத்து உப்பு கலந்து எட்டுமணிநேரம் புளிக்கவைக்கவும்.
- மாப்பிள்ளை சம்பா இட்லி மாவு தயார். இதனை இட்லி தட்டில் ஊற்றி ஏழு நிமிடம் ஆவியில் வேகவைத்து பரிமாறலாம்.
Healthy
Thank u
Nice
thnk u
very Nice
thnk u