சத்துக்கள் அதிகம் கொண்ட பாரம்பரிய அரிசிகளில் மிக முக்கியமான அரிசி மாப்பிள்ளை சம்பா அரிசி. இது சிகப்பரிசி வகையைச் சேர்ந்த பாரம்பரிய அரிசி. இது அரிசியாக மட்டுமில்லாமல் அவல் வகைகளிலும் கிடைக்கிறது. அவற்றை மிக எளிதாக லட்டு செய்து அனைவரும் விரும்பும் வகையில் மாப்பிள்ளை சம்பா அவல் லட்டு செய்து பயன்படுதல்லாம்.
அதிலும் இவ்வாறு மாப்பிள்ளை சம்பா அவலில் சத்தான லட்டு செய்து குழந்தைகளுக்கு அளிக்க குழந்தைகளும் விரும்பி உண்பார்கள், சத்துக்களையும் மிக எளிதாக பெறுவார்கள். குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் ஏற்ற சிறந்த லட்டு.
தேவையான பொருட்கள்
- 1 கப் மாப்பிள்ளை சம்பா அவல்
- 1/4 கப் வேர்கடலை
- 1/4 கப் முந்திரி
- 1 கப் நாட்டு சர்க்கரை / மண்டை வெல்லம்
- நெய்
- 1 ஏலக்காய் தூள்
செய்முறை
- முதலில் மாப்பிள்ளை சம்பா அவல் எடுத்து அதனை அடுப்பில் லேசாக வாட்டி பொரியவிடவும்.
- வேர்கடலை / நிலக்கடலையை வறுத்து எடுக்கவும். கைகளால் தேய்த்து அதன் தோலை நீக்கிவிடவேண்டும்.
- முந்திரியை சிறிது நெய்யில் வறுத்து எடுக்கவும்.
- வறுத்தவற்றை ஒரு மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும்.
- நன்கு மைய அல்லது சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொண்டு அதனுடன் ஏலக்காய் தூள், நாட்டு சர்க்கரை சேர்த்து மீண்டும் மிக்ஸியில் ஒரு சுத்து சுத்த வேண்டும்.
- பின் அவற்றை ஒரு தட்டில் கொட்டி தேவையான அளவு நெய்யை உருக்கி சேர்த்து உருண்டைகளாக உருட்ட வேண்டும்.
- அவ்வளவு தான் சுவையான சத்தான மாப்பிள்ளை சம்பா லட்டு தயார்.
மாப்பிள்ளை சம்பா அவல் லட்டு
சத்துக்கள் அதிகம் கொண்ட பாரம்பரிய அரிசிகளில் மிக முக்கியமான அரிசி மாப்பிள்ளை சம்பா அரிசி. இது சிகப்பரிசி வகையைச் சேர்ந்த பாரம்பரிய அரிசி. இது அரிசியாக மட்டுமில்லாமல் அவல் வகைகளிலும் கிடைக்கிறது. அவற்றை மிக எளிதாக பயன்படுதல்லாம்.