mapillai-samba-aval-payasam, red rice payasam, natural food, aduppilla samayal, raw food recipe, no oil no boil

மாப்பிள்ளை சம்பா அவல் பாயசம்

மாப்பிள்ளை சம்பா அவல் பாயசம் மிக எளிதாக தயாரிக்கக் கூடிய ஒரு சிறந்த இயற்கை உணவு. அடுப்பில்லாமல், நெருப்பில்லாமல் மிக எளிதாக சத்தானதாக தயாரிக்கக் கூடியது. காலை வேளையில் இதனை எடுத்துக் கொள்ள நிறைந்த உணவாகவும் புத்துணர்வூட்டும் உணவாகவும் இருக்கும்.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் ஏற்றது. பல சத்துக்கள் கொண்ட மாப்பிள்ளை சம்பா அவலை எளிதாக இவ்வாறு தயாரித்து உண்பதால் அதிலிருக்கும் முழு பலனையும் பெறலாம். இரும்பு சத்துக்கள், சுண்ணாம்பு சத்துக்கள், புரதம், அமினோ அமிலங்கள், நார் சத்துக்கள் என அனைத்து சத்துக்களும் ஒருங்கே இணைந்த ஒரு சுவையான இயற்கை உணவு.

mapillai-samba-aval-payasam, red rice payasam, natural food, aduppilla samayal, raw food recipe, no oil no boil

தேவையான பொருட்கள்

  • இரண்டு ஸ்பூன் மாப்பிள்ளை சம்பா அவல்
  • 1/2 தேங்காய்
  • 1 மொந்தன் வாழை பழம்
  • 3 – 4 ஸ்பூன் நாட்டு சர்க்கரை
  • 4 முந்திரிப்பருப்பு
  • 5 காய்ந்த திராட்சை
  • ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள்

செய்முறை

  • மாப்பிள்ளை சம்பா சிவப்பு அவல் கெட்டியாக இருக்கும்.
  • அதனை நன்கு சுத்தம் செய்து கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  • தேங்காயை பால் எடுத்துக் கொள்ள வேண்டும், இரண்டு மூன்று முறை நீர் சேர்த்து பிழிந்தும் பால் எடுத்துக் கொள்ளலாம்.
  • மாப்பிள்ளை சம்பா சிவப்பு அவல் நன்கு ஊறியப்பின் கனிந்த மொந்தன் பழம் சேர்த்து நன்கு பிசைய வேண்டும். மிக்ஸியில் அரைத்தும் எடுத்துக் கொள்ளலாம்.

  • பிசைந்த பின் அதனுடன் தேங்காய்ப் பால், நாட்டுச் சர்க்கரை கலந்து கொள்ள வேண்டும்.
  • இதனுடன் சிறிது ஏலக்காய்த் தூள். முந்திரிப் பருப்பு, காய்ந்த திராட்சை சேர்க்க சுவையான இயற்கை உணவு மாப்பிள்ளை சம்பா அவல் பாயசம் தயார்.
  • சுவையான பாயசம் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.