கோடை காலத்தில் அதிகம் கிடைக்கும் பழங்களில் ஒன்று மங்குஸ்தான் பழம். சில மருத்துவகுணங்கள் கொண்ட இந்த பழத்தில் சுண்ணாம்பு சத்துக்களையும் பாஸ்பரஸ் சத்துக்களும் அதிகம் கொண்ட பழம். வைட்டமின் சத்துக்கள் இந்த பழத்தில் மிக குறைவாகவே உள்ளது.
அதிக விலைக்கு விற்கப்படும் பழங்களில் ஒன்று இந்த மங்குஸ்தான். விலையுடன் பழத்தையும் பழத்தின் சத்தையும் ஓப்பிட விலைமட்டுமே அதிகம் இந்த விலைக்கு இதைவிட சத்துக்கள் அதிகம் கொண்ட பழங்கள் ஏராளமாகவே நமது தமிழகத்தில் உள்ளது.
தக்காளிப் போன்ற வடிவத்திலும் அடர் சிகப்பு ஊதா நிறத்திலிருக்கும் மங்குஸ்தான் பழத்தில் அதிக இருக்கும் பகுதி ஓடுதான். கனமான ஓட்டினுள் சிறிதாக நான்கு சுளைகள், அதனிலும் விதைகள் இருக்கும். அதனால் மங்குஸ்தானில் உண்ணத்தகுந்த பகுதி மிக சொற்பமே. பழத்தை மட்டுமில்லாமல் இதன் ஓட்டையும் பயன்படுத்தலாம்.
வெயிலுக்கு
பித்த உடலிருப்பவர்கள் இதனை உண்ணாமல் இருப்பது நல்லது. உடல் உஷ்ணத்தை தணிக்கும் தன்மைக் கொண்டது. அதிக வெயிலில் அலைபவர்களின் களைப்பையும் நாவறட்சியையும் போக்கும்.
பெண்களுக்கு
பெண்களுக்கு ஏற்படும் வயிற்றுவலி, பெரும்பாடு ஆகியவற்றை தீர்க்கும்.
மங்குஸ்தான் ஓடு
இந்த பழத்தின் ஓட்டை மைப்போல் அரைத்து தேன் கலந்து சாப்பிட சீதபேதி குணமாகும். குடலில் ஏற்படும் புண், சிறுநீரக கோளறுகள், மூல நோய்க்கும் சிறந்தது.
இந்த ஓடுகளை அடர் நிற சாயங்கள் தயாரிக்கவும் பயன்படுத்துவதுண்டு.
மங்குஸ்தான் பழத்தை வாங்கும்பொழுது இதன் மேல் தோல் காய்ந்து இராதபடி பார்த்து வாங்க வேண்டும். இல்லையானால் உள்ளிருக்கும் சுளைப்பகுதி அழுகிப் போய் இருக்கும்.