மாந்தளிர் / மாவிலை சாம்பல் பயன்கள்

வீட்டிற்கு வீடு கட்டாயம் இருக்கும் மரங்களில் ஒன்றாக மாமரம் உள்ளது. பல மருத்துவ குணங்கள் கொண்ட மரம் மாமரம். இதிலிருந்து கிடைக்கும் அனைத்து பாகங்களுமே பயன்படும் பகுதிகளாகவும், மருத்துவ பயன் கொண்டதாகவும் உள்ளது. மாமரத்தின் மாம்பழங்கள், காய் ஆகியவற்றை பொதுவாக அனைவருமே பயன்படுத்தினாலும், குறிப்பிட்ட சில வயதினர், மாவிலையின் பயன்களை அறிந்தவர்கள் கட்டாயம் அன்றாடம் மாந்தளிர் சிலவற்றை அன்றாடம் காலையில் உண்பதைப் பார்க்க முடியும்.

மாந்தளிர் / மாவிலையை உண்பதால் உடலில் புது இரத்தம் உற்பத்தியாவது, உடல் கழிவுகள் நீங்குவது, நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிப்பது என பல பயன்கள் இருந்தாலும் அன்றாடம் காலையில் நான்கைந்து இளம் சிவப்பு பச்சை நிறம் கலந்த மாந்தளிர்களை உண்பதால் நீரிழிவு கட்டுக்குள் இருக்கும் மற்றும் உடல் பருமனுக்கு மிக சிறந்தது. இந்த இலைகளை நீரில் ஊறவைத்தும் அருந்தலாம்.

மேலும் மாவிலை சாம்பல் பல நோய்களுக்கு மிக சிறந்த மருந்தாக உள்ளது. படை, சொறி, பேன், நமைச்சலுக்கு பயன்படுத்த நல்ல பலனை பெறலாம்.

மாவிலை சாம்பல் தயாரிப்பதற்கு

மாமரத்திலிருந்து உதிரும் / விழும் இலைகளை சேகரித்து, அவற்றை காயவைத்து தீமூட்டி எரிக்கவேண்டும். இவை நன்கு எரிந்த பின் வெண்மை நிறத்தில் சாம்பல் கிடைக்கும். இதுதான் மாவிலை சாம்பல்.

மாவிலை சாம்பல் பயன்கள்

உடலில் ஏற்படும் படை, சொறி போன்ற தொந்தரவுகளுக்கு மாவிலை சாம்பலுடன் சிறிது விளக்கெண்ணை சேர்த்து பூச விரைவில் அவை மறையும். பெரிய செலவிலாமல் எளிதாக தயாரித்து பயன்படுத்த சிறந்த பலனைப் பெறலாம்.

நமைச்சல் போன்ற தொந்தரவுகளுக்கு உடலில் பூச இந்த மாவிலை சாம்பலுடன் நல்லெண்ணெய் கலந்து பூசலாம். இதனால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு இருக்கும் மற்றொரு தொந்தரவு தலையில் ஏற்படும் ஈரும், பேனும். இதனால் உடலில் பல உபாதைகளும், உயிர்க்கு கூட ஆபத்துகளும் ஏற்படும். அதனால் தலையில் இந்த தொந்தரவை உடனே தீர்ப்பது மிக அவசியம். அதற்கு மாவிலை சாம்பல் பெருமளவில் உதவும். மாவிலை சாம்பலுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலைக்கு தேய்க்க பேன், ஈர் அழியும்.

இவை மட்டுமல்லாமல் மாவிலை சாம்பல் மரம் செடிகளில் ஏற்படும் பூச்சி தாக்குதலுக்கும் பெரும் பயனளிக்கும். சிறந்த பூச்சிகொல்லியாக செயல்பட மண்ணெண்ணெய்யுடன் மாவிலை சாம்பலைக் கலந்து மரம், செடி, கொடிகளுக்கு அடிக்கலாம். மாமரத்திற்கு கூட நல்ல பலனை அளிக்கும்.

(2 votes)