மாம்பழம் உஷ்ணத்தை அதிகரிக்குமா?

அனைவருக்கும் பிடித்த பழங்களில் ஒன்று மாம்பழம். முக்கனிகளில் ஒன்றான இந்த மாம்பழத்தை குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்பார்கள். மாம்பழத்தில் வைட்டமின் ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதை உட்கொள்வதால் நமது இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.

மாம்பழத்தில் உள்ள உஷ்ண கலோரி அளவு 14 கலோரிகள். ஆப்பிள் பழம், கொய்யா பழம், எலுமிச்சை பழம், வாழைப்பழம் இவை தரும் உஷ்ண அளவைவிட மாம்பழம் குறைந்த அளவு உஷ்ணத்தை தரக் கூடியதாக இருக்கிறது. எனவே எல்லா வயதினரும் மாம்பழம் கிடைக்கும் காலங்களில் முடிந்தவரை மாம்பழத்தை உட்கொண்டு உடலை பலப்படுத்திக் கொள்வது சிறந்த பலனை அளிக்கும். மாம்பழத்தை தனி உணவாக உட்கொள்ள உடலுக்கு உகந்தது. சிறியளவு உஷ்ணத்தையும் இதன் மூலம் தவிர்க்கலாம்.