மாம்பழம் – பயன்களும் மருத்துவமும்

முக்கனிகளில் முதல் கனி மா எனும் மாம்பழம். கனிகளிலே முக்கனி என முதலிடத்திலும் அந்த முக்கனிகளில் முதலாகவும் மாம்பழம் உள்ளது என்றால் அதற்கு மாம்பழத்தின் சுவை மட்டுமே காரணமில்லை. மாம்பழத்தின் சத்துக்களும் அதன் அபரிவிதமான மருத்துவ குணங்களும் தான்.

மாம்பழம் விளையும் மாமரமே மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கும் அற்புதமான மரம். மாமரத்தின் இலன் தளிர்களை ஒவ்வொருநாளும் காலையில் உண்பதால் உடலுக்கு தேவையான துவர்ப்பு சத்துக்களையும் இரத்தத்தை புதுப்பிக்கும் ஆற்றலையும் பெறமுடியும்.

பல ஆய்வுகள் தொடர்ந்து மாங்காய், மாம்பழம் சாப்பிடுபவர்களுக்கு அபாயமான பெருங்குடல் புற்றுநோய் வருவதில்லை என நிருபித்துள்ளது. மாம்பழம் உடலுக்கு உஷ்ணமா என பலருக்கும் கேள்விகள் உள்ளது மேலும் மாம்பழத்தில் அடங்கி இருக்கும் சத்துக்களையும் இணைப்பிலிருக்கும் பதிவில் பார்க்கலாம்.

தலைவலியை தீர்க்கும்

மாம்பழச்சாறு தீராத தலைவலியைப் போக்கும் குணமுடையது.

மாம்பழத்தின் வைட்டமின் சத்துக்கள்

மாம்பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி. டி ஆகிய வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளது. தோலில் வரும் கொழுப்பு கட்டி, வரம்பற்ற வளர்ச்சி, மாலைக்கண் நோய், கண்கட்டி, நரம்புத்தளர்ச்சி, ஜீரணக் கோளாறு, ‘டிப்தீரியா’ என்ற தொண்டை அடைப்பு நோய் இவற்றிற்கு மா சிறந்த மருந்தாகும்.

ஆஸ்துமா, மூலநோய்

நாட்பட்ட ஆஸ்துமாவாக இருந்தாலும் அதற்கு மாங்கொட்டை பருப்பு சிறந்த பலனை அளிக்கும். மாம்பருப்பை உலர்த்தித் தூளாக்கி, தூளுடன் தேன் சேர்த்துப் பிசைந்து நெல்லிக்காய் அளவு காலை, மாலை உண்டால் பலன் நிச்சயம். இதுவே மூலநோய், வயிற்றுக்கடுப்பு, பேதி. கொக்கிப்புழு இவற்றையும் நீக்கும்.

சிறுநீரக தொந்தரவுகள்

சிறுநீரகத்தில் ஏற்படும் எல்லாத் தொல்லைகளையும்
மாம்பருப்பு குணப்படுத்தும்.

நீரிழிவு கட்டுப்பட

நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்து துவர்ப்பு சுவை நிறைந்த மாந்தளிர். இளந்தளிர்களை நிழலில் உலர்த்தி பிறகு வெயிலில் நன்கு உலர்த்தி மைய இடித்து பொடியாக்கி ஒரு புட்டியில் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு ஒரு டம்பளர் கொதிக்கும் நீரில் ஒரு தேக்கரண்டி மாவிலைத்தூளைக் கலக்கி சூட்டோடு குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 2 வேளை வீதம் 40 நாட்கள் தொடர்ந்து அருந்த கடுமையான நீரிழிவு நோயும் கட்டுப்படும்.

தொண்டைக்கு

தொண்டைக்கம்மல், தொண்டைரணம், இருமல் போன்ற எந்தத் தொண்டை நோயையும் மாவிலை போக்கும். நன்கு முற்றிய 4 இலைகளைச் சட்டியில் போட்டு, அதில் 1 தேக்கரண்டி தேன் விட்டு அடுப்பிலேற்றி இலை கருகும் வரை வறுக்கவும். பின் 200 மில்லி நீர் விட்டுச் சுண்டும் வரை காய்ச்சவும். இதனை ஓர் அவுன்சு வீதம் 2 வேளை சாப்பிட எப்பேர்பட்ட தொண்டைத் தொல்லையும் நீங்கும்.

(1 vote)