மணத்தக்காளிக் கீரை – நம் கீரை அறிவோம்

அதிக சத்துக்களும் பலன்களும் கொண்ட ஒரு அற்புதமான கீரை மணத்தக்காளிக் கீரை. இதில் சில உயிர்ச் சத்துகளும், புரதச் சத்துகளும், இரும்புச் சத்துக்களும் அடங்கியுள்ளன. உலகமாதா, காகமாசி, வாயசம், காமாக்ஷி என பல பெயர்கள் மணதக்காளிக்கு உண்டு.

இந்த மணத்தக்காளிக் கீரையை உணவுடன் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் வாய்ப்புண், குடல்புண் குணமாகும். மூலச் சூட்டையும் தணிக்கும். மணத்தக்காளிக் காயுடன் கீரையும் பாசிப் பருப்பும் கலந்து உண்ணும் போது உடல் காங்கை என்னும் உடல் சூட்டைத் அது தணிக்கும். ஆசனக் கடுப்பு, நீர் கடுப்பு முதலிய நோய்களும் நீங்கும்.

மூல நோய்க்கு

மூல நோயால் வேதனைப்படுகிறார்கள் கீழ்கண்டவற்றின்படி தயார் செய்து பயன்படுத்தினால் குணமாகும். சிறு வெங்காயத்தையும், மணத்தக்காளிக் கீரையையும் பொடியாக நறுக்கிக் கொண்டு சட்டியில் போட்டு கொஞ்சம் விளக்கெண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து கிண்டி சூடாக்க வேண்டும். சூடானதும் சட்டியை கீழே இறக்கி, சூட்டுடன் அதனை எடுத்து ஒரு பெரிய வெற்றிலையில் வைத்து மூலம் கண்ட இடத்தில் வைத்துக் கட்டும் போது இதமாக இருக்கும் தொடர்ந்து கட்டும்போது மூலம் நீங்கிவிடும்.

காமாலை நோய்க்கு

காமாலை நோய்க்கு இந்த கீரையை நன்றாக இடித்து சாறு எடுத்து அந்த சாறுடன் பசுவின் பாலில் கலந்து தினசரி காலையில் வெறும் வயிற்றில் கொடுக்கும் பொழுது ஒரு வாரத்திலேயே காமாலை அகன்று விடும்.

பெண்களுக்கு

பெண்களுக்கு வெட்டைச் சூட்டினால் வெள்ளைப்படும். அதற்கு மணத்தக்காளிக் கீரையை நன்றாக உலர வைத்து நன்கு உணர்ந்ததும் ஒரு சட்டியில் நீர் நிறைய ஊற்றி இதனைப் போட்டு சுண்டக் காய்ச்சி கசாயமாகக் காய்ச்சி எடுத்து ஆற விட வேண்டும். ஆறியதும் அந்தத் கஷாய நீரை பெண்களின் மர்ம ஸ்தானத்தில் தடவி அதனை அடிக்கடி சுத்தம் செய்து வரும் போது வெள்ளை படுவது நின்றுவிடும். வாய்ப்புண்ணால் வேதனைப்படுகிறார்கள் இதன் சாறை எடுத்து வாய்க்கொப்பளித்து வர சீக்கிரம் வாய்ப் புண் அகன்று விடும். மணத்தக்காளிக் கீரையில் உடல் நலத்தை காக்கும் பலன்களை பெறலாம்.

மணத்தக்காளி வத்தல்

மணத்தக்காளிக் கீரையில் அதிக அளவு நீர்விட்டு சுண்டக்காய்ச்சி, மிளகு, சீரகம், உப்பு சேர்த்து எண்ணெய் விட்டு தாளித்து குழம்பு போல் தயார் செய்து உணவில் கலந்து உண்ணலாம். மணத்தக்காளி காயை தயிரில் ஊறவைத்து வெயிலில் காயவைத்து வறுத்து உணவுடன் கலந்து சாப்பிடலாம். அதனுடன் துவரம் பருப்பு, பாசிப் பருப்புடன் தேங்காய் சேர்த்து தாளித்து உண்ணலாம்.

(1 vote)