தாமரை பூ பயன்கள் மருத்துவம்

தாமரை பல மருத்துவகுணங்ககளைக் கொண்ட சிறந்த மலர். தாமரையில் வெண்தாமரை, செந்தாமரை, ஆகாயத் தாமரை, கல்தாமரை எனப் பல வகை உண்டு. இதில் வெண்தாமரைப் பூவே அதிக மருத்துவ குணமுடையதாகும். உடல் வெப்பத்தினால் ஏற்படும் கோளாறுகளைத் தணிப்பதே இதன் தனித்தன்மையாகும்.

கண்களுக்கு

உஷ்ணத்தினால் ஏற்படும் சிவந்த கண்கள், அதனால் ஏற்படும் கண்ணீர் ஆகியவற்றிற்கு தாமரைப் பூவைப் பசும்பாலில் சேர்த்து காய்ச்சி இறக்கியப்பின், அந்த ஆவியை விழிகளைத் திறந்து கொண்டு பிடிக்க கண்ணில் ஏற்படும் தொந்தரவுகள் மறையும். கண் தெளிவடையும்.

வயிற்று நோய்

சீரணமின்மையால் ஏற்படும் பேதி, ஈரல் நோய், சீதபேதி போன்ற வயிற்று நோய்களுக்குப் தாமரை பூவின் சாறு சிறந்த நிவாரணத்தை அளிக்கும்.

கர்ப்பிணிகளுக்கு

கர்ப்பிணிகளுக்குத் தாமரைப் பூ மிகவும் நல்லது. 8வது மாதத்தில் பசி மந்தம் ஏற்படும் போது, தாமரைப்பூவுடன் நெய்தல் கிழங்கும் சேர்த்து அரைத்துப் பசும்பாலில் கலந்து கொடுக்க கபகபவென்று பசி எடுக்கும்.

மூளைக்கு

மூளையைச் சுறுசுறுப்பாக்கும் ஆற்றல் தாமரைப் பூவிற்குண்டு. இதனைக் கஷாயமாக்கிச் சாப்பிட்டு வந்தால் மூளை பலப்படும், அறிவு பிரகாசமடையும், அதுமட்டுமில்லாமல் நரை திரை மாறும்.

காய்ச்சல்

அனல் கொளுத்தும் காய்ச்சலுக்கு தயங்காமல் தாமரைப்பூ கஷாயம் எடுக்க சிறிது நேரத்தில் நன்றாக வியர்த்து, சுரம் குறையும்.

இரத்தக் கொதிப்பு

தாமரைப்பூ கஷாயத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு அடங்கும். இந்நிலையில் உணவில் அரை உப்புதான் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தாமரை நார் விளக்கு

தாமரை நாரின் பஞ்சினால் திரி செய்து ஏற்றப்படும் விளக்கைப் பார்ப்பவர்களுக்குக் கண் பார்வை குளிர்ச்சி பெறும். அவ்விளக்கு பசுநெய் அல்லது இலுப்ப நெய்யைக் கொண்டோதான் ஏற்றப்பட வேண்டும்.

(12 votes)