கல்லீரல் நோய்களுக்கு

நமது உடலின் மிக பெரிய உள்ளுறுப்பு கல்லீரல். உடல் சீராக இயங்குவதற்கும், உண்ணும் உணவு சீராக முறையும் உடலால் உட்கிரகிக்கவும் அவசியமாகும் உறுப்பும் இது. உடல் நச்சுக்களை வெளியேற்றும் உன்னதமான பணியையும் கல்லீரலே செய்கிறது. அதனால் கால்லீரலில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அது உடலில் பல தொந்தரவுகளை ஏற்படுவதோடு உடலுக்கும் அது பேராபத்தை ஏற்படுத்தும்.

உணவு, உடல் பருமன், நோய் கிருமிகள் மற்றும் மதுவும் கல்லீரல் பழுதடைய மிக முக்கிய காரணமாக உள்ளது. உடல் ஆரோக்கியமாக இருக்க நாம் பாதுகாக்க வேண்டிய மிக முக்கிய உறுப்பு கல்லீரல். இதில் ஏதேனும் பாதிப்பு என கண்டறிந்தாலே அதற்கான மருத்துவ முறைகளை மேற்கொள்வது அவசியமானது. அதனோடு வீட்டு வைத்திய முறையையும் பின்பற்ற மிக சிறந்த பலனை விரைவாகப் பெறலாம். கல்லீரல் பாதிப்பு இல்லாதவர்களும் அவ்வப்பொழுது இவற்றை பின்பற்ற கல்லீரலை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம்.

கல்லீரல் வலுவடைய

  • பசலை கீரையை அவ்வப்பொழுது உண்டுவர சிறந்த கல்லீரல் வலுவடையும். கல்லீரலுக்கு உகந்த கீரையாகவும் இதுஉள்ளது.
  • திராட்சை பழங்கள் கல்லீரல் சார்ந்த பல நோய்களை போக்க கூடிய ஒரு அற்புதமான மருந்து.
  • மாதம் ஒருமுறை கீழாநெல்லி சமூலத்தை சிதைத்து, மைய அரைத்து, சாறு எடுத்து இரண்டு ஸ்பூன் அளவு கீழாநெல்லி சாறு பருகுவது கல்லீரலைப் பலப்படுத்த உதவும். கல்லீரலில் ஏற்பட்டிருக்கும் பல நோய் மறையும் கைகண்ட ஒரு சிறந்த மருந்து இது. கல்லீரல் நோயால் பாதிக்கப் பட்டவர்கள் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் இவ்வாறு செய்ய சிறந்த பலனை பெறலாம்.

கல்லீரல் வீக்கங்களுக்கு

நொச்சி இலையை மைய அரைத்து சாறு பிழிந்து ஒரு ஸ்பூன் அளவு சாறு பருகுவது நல்ல ஒரு பலனை கொடுக்கும். கல்லீரல் வீக்கங்கள் விரைவில் குறையும்.

கல்லீரல் வலிகளுக்கு

ரோஜா இதழ்கள், சோம்பு, புதினா ஆகியவற்றை கால் ஸ்பூன் அளவு என மூன்றையும் சம அளவு எடுத்து ஒன்றாக கலந்து ஒரு கப் நீரில் கொதிக்க வைத்து குடிநீராக காய்ச்சி பருக நல்ல வலிகள் குறையும்.