சாமை உப்புமா / Samai Upma

உடல் அசதி மற்றும் தளர்ச்சியை நீக்கி சுறுசுறுப்பு தரும் சிறுதானியம் சாமை. எலும்புகளுக்கு ஊட்டம் அளிக்கும். இதைத் தொடர்ந்து சாப்பிட முதுகெலும்பு பலப்படும்.

சாமை அரிசி பயன்கள், நன்மைகளை தெரிந்து கொள்ள – சாமை அரிசி.

samai rice, samai arisi, millet in tamil, samai benefits in tamil, samai health benefits and medicinal uses, little millet

பெண்களுக்கு தேவையான பல பல சத்துக்கள் நிறைந்த சிறுதானியம் சாமை. சாதாரணமாக தயாரிக்கக் கூடிய ரவை உப்புமாவிற்கு பதில் சாமை அரிசியை அப்படியே பயன்படுத்த சுவையான சத்தான உப்புமாவை தயாரிக்கலாம். இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கக்கூடியது. எளிதாகவும் தயாரிக்கக்கூடியது. அனைவருக்கும் ஏற்றது.

தேவையான பொருட்கள்

  • 1 கப் சாமை அரிசி
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 2 ஸ்பூன் கடலை பருப்பு

  • 2 ஸ்பூன் உளுந்து
  • கடுகு
  • 3 ஸ்பூன் கடலை எண்ணெய்
  • கறிவேப்பிலை
  • உப்பு

செய்முறை

  • சாமை அரிசியினை லேசாக வறுத்து கொள்ளவும்.
  • வாணலியில் கடலை எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கடலை பருப்பு தாளித்து கறிவேப்பிலை, நீளமாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வதங்கிய பின் ஒரு கப் சாமை அரிசிக்கு 3 கப் தண்ணீர் என்ற விதத்தில் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். 
  • நன்கு கொதி வந்ததும் சாமை அரிசியை சேர்க்கவும். மீண்டும் நல்ல கொதி வந்த பின் அடுப்பை சிறு தீயில் வைக்கவும். 
  • நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்து கிளறி பரிமாறலாம். 
  • எளிதாகவும், சத்தானதுமானது இந்த சாமை அரிசி உப்புமா. பெண்களுக்கு ஏற்ற சாமை அரிசியில் உப்புமா செய்து உண்ண உடல் பலப்படும்.