சாமை அரிசி தக்காளி சாதம்

உடல் அசதி மற்றும் தளர்ச்சியைப் போக்கி சுறுசுறுப்பு தரும் சிறுதானியம் சாமை. எலும்புகளுக்கு ஊட்டம் அளிக்கும். இதைத் தொடர்ந்து சாப்பிட முதுகெலும்பு பலப்படும்.

சாமை அரிசி பயன்கள், நன்மைகளை தெரிந்துக்கொள்ள – சாமை அரிசி.

பெண்களுக்கு தேவையான பல பல சத்துக்கள் நிறைந்த சிறுதானியம் சாமை. இதனில் சுவையான மற்றும் விரைவாக தயாரிக்கக்கூடிய தக்காளி சாதம் தயாரிக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். சத்துக்கள் நிறைந்த உணவு.

samai rice, samai arisi, millet in tamil, samai benefits in tamil, samai health benefits and medicinal uses, little millet

தேவையான பொருட்கள்

  • 1 கப் சாமை அரிசி
  • 3 தக்காளி
  • 1 வெங்காயம்
  • ¼ ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 சிட்டிகை மஞ்சள் தூள்
  • 1 பச்சை மிளகாய்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

  • சிறிது கொத்தமல்லி
  • சிறிது கறிவேப்பிலை
  • ½ ஸ்பூன்  கடுகு
  • ½ ஸ்பூன்  சீரகம்
  • ½ ஸ்பூன்  சோம்பு
  • 2 ஸ்பூன் நல்லெண்ணெய்
  • உப்பு

செய்முறை

  • வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். 
  • சாமை அரிசியை நன்கு களைந்து இருபது நிமிடம் ஊறவைக்கவும்.
  • ஒரு மண்சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், சோம்பு  தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
  • வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • பாதி வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
  • இவை நன்கு வதங்கியதும் 2 ½ கப் தண்ணீர் சேர்க்கவும்.
  • இந்த கலவை கொதி வரும் பொழுது ஊறவைத்திருக்கும் சாமை அரிசியையும் உப்பையும் சேர்க்கவும்.
  • நன்கு கொதித்து தண்ணீர் வற்றியதும் அடுப்பை அணைத்து கொத்தமல்லி போட்டு மூடிவைக்கவும்.
  • பத்து நிமிடம் கழித்து கிளறிவிட உதிரியாக சாமை தக்காளி சாதம் தயாராக இருக்கும். 
  • குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் பள்ளி அலுவலகத்திற்கு எடுத்து செல்லலாம்.
  • மண்பானையில் செய்ததால் மிருதுவாக மலர்ந்தும் அதேசமயம் உதிரியாகவும் மதியம்வரை இருக்கும்.

சாமை தக்காளி சாதம்



பெண்களுக்கு தேவையான பல பல சத்துக்கள் நிறைந்த சிறுதானியம் சாமை. இதனில் சுவையான மற்றும் விரைவாக தயாரிக்கக்கூடிய தக்காளி சாதம் தயாரிக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். சத்துக்கள் நிறைந்த உணவு.


⏲️ ஆயத்த நேரம்
20 mins

⏲️ சமைக்கும் நேரம்
20 mins

🍴 பரிமாறும் அளவு
2

🍲 உணவு
சாதம்


தேவையான பொருட்கள்
  • 1 கப் சாமை அரிசி
  • 3 தக்காளி
  • 1 வெங்காயம்
  • ¼ ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 சிட்டிகை மஞ்சள் தூள்
  • 1 பச்சை மிளகாய்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • சிறிது கொத்தமல்லி
  • சிறிது கறிவேப்பிலை
  • ½ ஸ்பூன்  கடுகு
  • ½ ஸ்பூன்  சீரகம்
  • ½ ஸ்பூன்  சோம்பு
  • 2 ஸ்பூன் நல்லெண்ணெய்
  • உப்பு
செய்முறை
  1. வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். 
  2. சாமை அரிசியை நன்கு களைந்து இருபது நிமிடம் ஊறவைக்கவும்.
  3. ஒரு மண்சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், சோம்பு  தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
  4. வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  5. பாதி வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
  6. இவை நன்கு வதங்கியதும் 2 ½ கப் தண்ணீர் சேர்க்கவும்.
  7. இந்த கலவை கொதி வரும் பொழுது ஊறவைத்திருக்கும் சாமை அரிசியையும் உப்பையும் சேர்க்கவும்.
  8. நன்கு கொதித்து தண்ணீர் வற்றியதும் அடுப்பை அணைத்து கொத்தமல்லி போட்டு மூடிவைக்கவும்.
  9. பத்து நிமிடம் கழித்து கிளறிவிட உதிரியாக சாமை தக்காளி சாதம் தயாராக இருக்கும். 
  10. குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் பள்ளி அலுவலகத்திற்கு எடுத்து செல்லலாம்.
  11. மண்பானையில் செய்ததால் மிருதுவாக மலர்ந்தும் அதேசமயம் உதிரியாகவும் மதியம்வரை இருக்கும்.