சுவையான சத்தான குழந்தைகள் விரும்பி உண்ணும் சிறுதானிய ஸ்நாக்ஸ். சுவையான சத்தான குழந்தைகள் விரும்பி உண்ணும் சிறுதானிய ஸ்நாக்ஸ். குழந்தைகள் உடல் ஆரோக்யத்திற்கு உறுதுணையாக இருக்கும் சிறந்த உணவு. குழந்தைகளுக்கு தேவையான இரும்புசத்துக்கள் நிறைந்தது.
தேவையான பொருட்கள்
- 1 கப் சாமை மாவு
- 10 பேரீச்சம் பழம்
- 1 கப் நாட்டுச்சக்கரை
- 1 கப் நெய்யில் வருத்த தேங்காய் துருவல்
- சிறிது உப்பு
செய்முறை
- பேரீச்சையில் உள்ள விதைகளை நீக்கி வேக வைத்து, ஆற வைத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- அதனை வாணலியில் போட்டு, அதனுடன் நாட்டுச்சக்கரை, வருத்த தேங்காய் துருவல், நெய் சேர்த்து வதக்கி பூரணமாக செய்து கொள்ளவும்.
- அகலமான பத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி அதில் சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- பின்னர் சாமை மாவை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
- சப்பாத்திமாவு பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து இறக்கவும்.
- கை பொறுக்கும் அளவு சூடு இருக்கும்போதே மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
- பின்னர் சப்பாத்திப் போல் வட்டமாக சற்று கனமாக திரட்டு அல்லது தட்டிக் கொள்ளவும்.
- அதன் நடுவில் கொஞ்சம் பூரண கலவையை வைத்து ரோல் செய்து, இட்லி பத்திரத்தில் பரப்பவும்.
- பின் ஆவியில் பத்து நிமிடம் வேகவைத்து எடுத்து, சிறு சிறு வட்டங்களாக வெட்டி பரிமாறவும்.
- சுவையான சத்தான சாமை பேரிச்சை ரோல் தயார்.
சாமை பேரீச்சை ரோல்
சுவையான சத்தான குழந்தைகள் விரும்பி உண்ணும் சிறுதானிய ஸ்நாக்ஸ் .