எலும்புகளுக்கு ஊட்டம் அளிக்கும் சிறுதானியம் சாமை. இந்த சாமை அரிசியை அவ்வப்பொழுது உணவுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உட்கொள்ள உடல் பலப்படும். சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் நம் பாரம்பரிய தானியமாகவும் இந்த சாமை அரிசி உள்ளது.
சாமை அரிசி பயன்கள், நன்மைகளை தெரிந்துக்கொள்ள – சாமை அரிசி. பெண்களுக்கு தேவையான பல பல சத்துக்கள் நிறைந்த சிறுதானியம் சாமை. சத்துக்கள் நிறைந்த உணவு.
தேவையான பொருட்கள்
- 2 கப் சாமை அரிசி மாவு
- தேவையான அளவு உப்பு
- 1 கப் வெல்லம்
- ¼ கப் தேங்காய் துருவல்
- ½ ஸ்பூன் ஏலப் பொடி
- 2 ஸ்பூன் நெய்
செய்முறை
- சாமை அரிசி மாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து, வெதுவெதுப்பான நீர் ஊற்றி பிசறிக் கொள்ளவேண்டும்.
- மாவினை எடுத்து கையால் பிடித்தால், பிடிக்க வர வேண்டும்.
- பிறகு இட்லித் தட்டில் மாவை வைத்து ஆவியில் 10 நிமிடம் வேகவிடவும்.
- மாவு வெந்தப் பின் எடுத்து உதிர்த்துக் கொள்ளவேண்டும்.
- இதனுடன் வெல்லம், நெய், தேங்காய் துருவல், ஏலப்பொடியைச் சேர்த்து கலந்து பரிமாறவும்.
- சத்தான சுவையான சாமை புட்டு தயார்.
சாமை அரிசி புட்டு
எலும்புகளுக்கு ஊட்டம் அளிக்கும் சிறுதானியம் சாமை. இந்த சாமை அரிசியை அவ்வப்பொழுது உணவுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உட்கொள்ள உடல் பலப்படும். சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் நம் பாரம்பரிய தானியமாகவும் இந்த சாமை அரிசி உள்ளது.
பரிமாறும் அளவு : – 3